கவின்
சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் கவின். இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்ற கவின் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக ஜொலித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன டாடா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்துக்கு பின்னர் கவினுக்கான மார்க்கெட் உயர்ந்து அவர் சம்பளத்திலும் கோடியை நெருங்கி விட்டாலும், அவருக்கு இன்னும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.
கஞ்சா கருப்பு
இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. இதையடுத்து பருத்திவீரன், தாமிரபரணி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பேமஸ் ஆன கஞ்சா கருப்பு டாக்டர் பெண்ணை திருமணம் செய்து சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆனார். ஆனால் அதன்பின்னர் படம் தயாரிக்க ஆசைப்பட்டு நிறைய கடன் வாங்கி வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட அவர், தற்போது வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறாராம்.
எதிர்நீச்சல் மாரிமுத்து
மாரிமுத்து எதிர்நீச்சல் தொடர் மூலம் பேமஸ் ஆனாலும், இவர் சினிமாவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இயக்குனர் வஸந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் 2008-ம் ஆண்டு வெளிவந்த கண்ணும் கண்ணும் என்கிற படத்தை இயக்கியும் இருந்தார். அந்த படம் கைகொடுக்காததால் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்த மாரிமுத்துக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இவர் வாடகை வீட்டில் வசித்து வந்தாலும், தற்போது சென்னையில் இடம் வாங்கி சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வருகிறாராம்.
இதையும் படியுங்கள்... மீண்டும் இணையும் மாமன்னன் கூட்டணி... வடிவேலுவை நாயகனாக வைத்து மாரி செல்வராஜ் செய்ய உள்ள அடுத்த சம்பவம்
பார்த்திபன்
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பேமஸ் ஆனவர் தான் பார்த்திபன். இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக படம் இயக்கி பல்வேறு விருதுகளை வென்றுள்ள பார்த்திபன், தலைசிறந்த நடிகராகவும் பல்வேறு படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். இப்படி பெயர், புகழோடு இருந்தாலும், தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறாராம் பார்த்திபன்.
ஷகீலா
மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் ஷகீலா. அந்த காலத்தில் மோகன்லால், மம்முட்டிக்கு நிகராக இவர் நடித்த படங்கள் ஓடின. இதனால் இவருக்கு லட்ச லட்சமாக காசும் கிடைத்துள்ளது. அந்த காசையெல்லாம் வைத்திருந்தால் வருமான வரித்துறை ரெய்டு வந்துவிடும் எனக்கூறி அவரது உறவினர்கள் அவரிடம் இருந்த காசையெல்லாம் வாங்கி ஏமாற்றிவிட்டார்களாம். இதனால் சொந்தமாக வீடு எதுவும் இல்லாமல் தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசிக்கிறாராம் ஷகீலா.