நாளுக்கு ஒரு கெட்டப் மாத்தினா எப்படி? அப்போ சீயான் 62 ரெடியா? - லோகேஷ் AD-யுடன் உருவாகும் ஒரு கூட்டணி!

First Published | Jul 8, 2023, 2:14 PM IST

நீண்ட தாடியும், தலைமுடியும் கொண்டு பல மாதங்களாக வலம் வந்து கொண்டிருந்த விக்ரம், நேற்று முன்தினம் தாடியை முழுவதுமாக எடுத்துவிட்டு அடர்த்தியான தலை முடியோடு காட்சி கொடுத்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக மிக நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சியான் விக்ரம். அந்த பட பணிகள் மற்றும் ப்ரோமோஷன் பணிகள் முடிந்த உடனேயே பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் இறங்கினார் விக்ரம். 

தான் நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்குமே தன் முழு உழைப்பையும் அளித்து நடிக்கும் ஒரு சிறந்த நடிகர் அவர் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் பல கஷ்டமான தருணங்களை கடந்து, விலா எலும்பில் ஏற்பட்ட முறிவோடு சில காலம் ஓய்வு பெற்று, மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து தற்பொழுது அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : வடிவேலுவை நாயகனாக வைத்து மாரி செல்வராஜ் செய்ய உள்ள அடுத்த சம்பவம்!

நீண்ட தாடியும், தலைமுடியும் கொண்டு பல மாதங்களாக வலம் வந்து கொண்டிருந்த விக்ரம், நேற்று முன்தினம் தாடியை முழுவதுமாக எடுத்துவிட்டு அடர்த்தியான தலை முடியோடு காட்சி கொடுத்தார். இந்நிலையில் அந்த தலைமுடியையும் குறைத்து விட்டு தற்பொழுது தனது அடுத்த பட பணிகளுக்கு அவர் ஆயத்தமாகி வருவது போல தெரிகின்றது.

Tap to resize

இன்னும் இந்த தகவல் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை என்றாலும், சியான் நடிக்கும் 62வது திரைப்படத்தை லோகேஷ கனகராஜின் உதவி இயக்குனர் மகேஷ் சுப்பிரமணியன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் அமைக்கும் பணிகளை லோகேஷன் கனகராஜ் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. 

விக்ரமின் கோப்ரா மற்றும் விஜயின் லியோ திரைப்படங்களை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லலித்குமார் இந்த திரைப்படத்தை தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்பதும், கோலிவுட் வட்டாரங்கள் வெளியிடும் சிறு சிறு தகவல்களை கொண்டு கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : அதிரடி ஆக்சனில் இறங்கும் திரிஷா - "மின்னல் முரளி" தான் படத்தின் ஹீரோ!

Latest Videos

click me!