Anirudh - Kaviya Maran Wedding Reception Photos : அனிருத் மற்றும் காவியா மாறன் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் முதல் தோனி வரை ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களின் வருகையால் களைகட்டி வருகிறது. நவம்பர் 21-ம் தேதி தொடங்கிய இந்த பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி, நவம்பர் 22-ம் தேதியன்றும் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
27
அஜித் பங்கேற்பு
குறிப்பாக, இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது அங்கு வந்த அஜித்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்புடன் கட்டியணைத்து வரவேற்றார். இருவரும் சந்தித்துக் கொண்ட இந்த அழகான தருணம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
37
மாஸ் எண்ட்ரி கொடுத்த தோனி
இந்த விழாவின் மற்றொரு முக்கியமான ஹைலைட்டாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வருகை அமைந்திருந்தது. தனது மனைவி சாக்ஷியுடன் வருகை தந்த தோனி, மணமக்கள் அனிருத் மற்றும் காவியா மாறனை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், தோனி சென்னையில் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
ஒருபுறம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், மறுபுறம் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமான தோனி என இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அஜித் மற்றும் தோனியை இணைத்து ‘ரெட்டை தல’ என்ற பெயரில் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
57
பிரபலங்களின் சங்கமம்
இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் ஜோடியாக வந்து கலந்துகொண்டனர். அதேபோல் இயக்குநர் அட்லீ தன் மனைவி ப்ரியா உடன் வந்து அனிருத் - காவியா ஜோடியை வாழ்த்தினார். இதுதவிர இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமார், எச்.வினோத், அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த விழாவில் கலந்துகொண்டது.
67
சிம்பு - எஸ்.கே பங்கேற்பு
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனிருத்தின் நெருங்கிய நண்பர்களான சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டனர். இதில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் அரசன் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இதுவாகும். அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களை அனிருத் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
77
இணையத்தை ஆக்கிரமித்த அனிருத் ரிஷப்சன்
இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நட்சத்திரங்கள் அணிவகுத்து வந்து கலந்துகொண்டனர். இதனால் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், பிரபலங்களின் சந்திப்பு வீடியோக்களும் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.