Highest Grossing Movies : 2026-ல் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 6 படங்கள்.. இந்த லிஸ்ட்டில் உள்ள ஒரே ஒரு தமிழ் படம்

Published : Nov 22, 2026, 10:15 AM IST

Highest Grossing Movies 2026: இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் கோடி கோடியாய் வசூலை அள்ளிக் குவித்து அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 6 படங்கள் இடம் பிடித்துள்ளன.

PREV
17
2026 பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட படங்கள்
2026 முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த ஆண்டு வெளியான சில சூப்பர் ஹிட் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியுள்ளன. அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இவற்றுக்கு முக்கிய இடமுண்டு. எந்தெந்த படங்கள் எவ்வளவு வசூல் செய்தன எனப் பார்க்கலாம்.
27
துரந்தர் 2

ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 'துரந்தர் 2' உலகளவில் ரூ.1,813.39 கோடியை வசூலித்துள்ளது. இந்தியாவில் இதன் கிராஸ் கலெக்‌ஷன் ரூ.1,375.39 கோடி, நெட் கலெக்‌ஷன் ரூ.1,149.30 கோடி. மார்ச் மாதம் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். ரன்வீர் சிங்குடன் அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன், ராகேஷ் பேடி, மாதவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

37
ராமாயணா

'ராமாயணா' வெளியாகி வெறும் 17 நாட்களே ஆன நிலையில், உலகளவில் ரூ.1,600 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்தியாவில் இதன் கிராஸ் கலெக்‌ஷன் ரூ.1,077.87 கோடியாகவும், நெட் கலெக்‌ஷன் ரூ.902.31 கோடியாகவும் உள்ளது. இதில் ரன்பீர் கபூருடன் யாஷ், சாய் பல்லவி, ரவி துபே ஆகியோர் நடித்துள்ளனர்.

47
ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' 2026-ல் அதிக வசூல் செய்த தமிழ் படமாக உருவெடுத்துள்ளது. இப்படம் உலகளவில் சுமார் ரூ.830 கோடியை வசூலித்துள்ளது. தமிழ் திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமையை ஜெயிலர் 2 பெற்றுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

57
த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்

கிரைம் த்ரில்லர் படமான 'த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்' இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதன் உலகளாவிய வசூல் ரூ.589.16 கோடி. இந்தியாவில் கிராஸ் கலெக்‌ஷன் ரூ.455.96 கோடி, நெட் கலெக்‌ஷன் ரூ.380.86 கோடி. அஜய் தேவ்கனுடன் ஜெய்தீப் அஹ்லாவத், தபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

67
ஹனுமான் அன்ஷ்

வெறும் ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவான 'ஹனுமான் அன்ஷ்' உலகளவில் ரூ.452.53 கோடி வசூலித்து பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு அதிக லாபம் ஈட்டிய படங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவில் கிராஸ் கலெக்‌ஷன் ரூ.403.73 கோடி, நெட் கலெக்‌ஷன் ரூ.342.15 கோடி. நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இதில் ஷோபினவ் சத்யா நாயகனாக நடித்துள்ளார்.

77
பார்டர் 2

சன்னி தியோல் நடித்த 'பார்டர் 2' உலகளவில் ரூ.449.44 கோடி வசூலித்து இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இந்தியாவில் இதன் கிராஸ் கலெக்‌ஷன் ரூ.392.19 கோடி, நெட் கலெக்‌ஷன் ரூ.328.33 கோடி. சன்னி தியோலுடன் தில்ஜித் தோசாஞ்ச், வருண் தவான், அஹான் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories