வந்தாச்சு ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக்... ஸ்டைலிஷ் லுக்கில் மிரட்டும் தல அஜித்...!

First Published | Jul 11, 2021, 7:15 PM IST

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும், மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. 

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் காம்பினேஷனில் உருவாகி வருகிறது வலிமை திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றி வருகிறார்.
இந்தப் படத்தின் பூஜை 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.கொரோனாவின் இரண்டு அலைகளால் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது.
Tap to resize

சுமார் 2 வருடங்களாக 'வலிமை' படம் குறித்த எந்தவொரு தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, திருச்செந்தூர் முருகன், கிரிக்கெட் ஸ்டேடியம் கண்ட இடங்களிலும் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டு அட்ராசிட்டி செய்து வந்தனர்.
வரும் ஜூலை 15ம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும், மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
தற்போது சொன்ன படியே சொன்ன நேரத்திற்கு வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.
பைக் ரேசர் லுக்கில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வெறித்தனமாக பைக் ஓட்டும் ஹாலிவுட் ஸ்டைலில் தல அஜித் இருக்கும் மோஷன் போஸ்டரும், அதற்காக யுவன் போட்டுள்ள ஸ்பெஷல் பிஜிஎம்மும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
இதுவரை வலிமை அப்டேட் தராதற்காக போனிகபூரை வறுத்தெடுத்து வந்த தல ரசிகர்கள், அவரை பாராட்டும் விதமாக #BoneyKapoor என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Latest Videos

click me!