விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம் சிகிச்சை பலனின்றி மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

First Published | Jul 11, 2021, 4:48 PM IST

கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, நெல்லூர் அருகே எதிரே வந்து கொண்டிருந்த காரோடு கத்தி மகேஷ் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

கத்தி மகேஷின் சினிமா விமர்சனங்களால் பல்வேறு சர்ச்சைகள் வெளியானது உண்டு. அத்துடன் சமூக வலைதளங்களில் கத்தி மகேஷுக்கும் பிரபல தெலுங்கு நடிகர்களின் ரசிகர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்படுவதுண்டு.
இப்படிப்பட்ட சர்ச்சை கருத்துக்கள் காரணமாக 2018ம் ஆண்டு கத்தி மகேஷ் ஐதராபாத்திற்குள் வரக்கூடாது என 6 மாதம் தடை விதிக்கும் அளவிற்கு எல்லாம் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தது.
Tap to resize

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, நெல்லூர் அருகே எதிரே வந்து கொண்டிருந்த காரோடு கத்தி மகேஷ் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த கத்தி மகேஷ், முதலில் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கத்தி மகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos

click me!