நயன்தாரா லவ்வரால் ட்ரெண்டாகும் #ValimaiIntroSong ஹேஸ்டேக்... தல படத்தின் தரமான சம்பவம் பற்றி தெரியுமா?

First Published | Feb 10, 2021, 7:03 PM IST

யாராவது அப்டேட் கொடுக்க மாட்டார்களா? என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்து குஷியாக்கியுள்ளார். 

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக பூஜை போட்ட அன்று சொன்னதோடு சரி, அதன் பிறகு எந்த அப்டேட்டும் சொல்லமாட்டேன் என விடப்பிடியாக இருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.போஸ்டர், பேனர், ட்ரெண்டிங் ஹேஷ்டேக் மூலமாக எல்லாம் அப்டேட் கேட்டு அலுத்து போன தல ரசிகர்கள் கடைசியாக, மூக்குத்தி அம்மனில் ஆரம்பித்து திருச்செந்தூர் முருகன் வரை அப்டேட் கேட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஐதராபாத்தில் ரசிகர்களை சந்தித்த தல அஜித்திடம், அப்டேட் எப்போது என ரசிகர் கேட்ட கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தல அஜித்தே விரைவில் என பதிலளித்ததாக சோசியல் மீடியாவில் தீயாய் தகவல்கள் பரவியது.
Tap to resize

சமீபத்திய தகவலின் படி வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படம் பிடிப்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் ஸ்பெயின் கிளம்ப தயாராகி வருகிறதாம். பைக்கில் அனல் பறக்கும் சண்டை காட்சிகளை அங்கு படமாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதையடுத்து மாஸ்டர் படத்தில் டாக்டர் மதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சங்கீதா, “வலிமை” படத்தில் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் வலிமை படத்தில் தான் நடித்திருப்பதாக கூறும் சங்கீதா, அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் எனக்கு கிடைக்கவில்லை என்றும், இயக்குநர் வினோத்துடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
நேற்று ‘வலிமை’ படத்தில் தல அஜித் குடும்பம் இதுதான் என ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பகிர்ந்து வந்தனர். யாராவது அப்டேட் கொடுக்க மாட்டார்களா? என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்து குஷியாக்கியுள்ளார்.
வலிமை படத்திற்கான நடிகர் அஜித்தின் Intro song தயாராகிவிட்டதாக யுவன் தெரிவித்துள்ளார். இது சரியான ஒரு மாஸ் சாங்காக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
செம்ம துள்ளல் இசையுடன் உருவாகியுள்ள இந்த பாடலை எழுதியுள்ளது இயக்குநர் விக்னேஷ் சிவனாம். என்னை அறிந்தால் படத்தில் ‘அதாரு அதாரு’ என்ற சூப்பர் ஹிட் பாடலையும் அவர் தான் எழுதியுள்ளாராம். அதனால் அஜித் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்புடன் #ValimaiIntroSong என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அத்துடன் அந்த பாடல் ஷூட்டிங் செய்யப்பட்ட லோக்கெஷன் தொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜிகு ஜிகுவென லைட் வெளிச்சத்தில் ஜொலிக்கும் இந்த போட்டேக்களைப் பார்த்து ரசிகர்கள் வேற லெவலுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest Videos

click me!