விஜய் டிவி தொகுப்பாளினி டிடிக்கு இரண்டாவது திருமணமா?வெளியான உண்மை தகவல்..!

First Published | Feb 10, 2021, 5:47 PM IST

விஜய் டிவி, டிடிக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல், சமூக வலைத்தளத்தில் வெளியாகி வரும் நிலையில் இது குறித்த உண்மை தற்போது தெரியவந்துள்ளது.

விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர். இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார்.
திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
Tap to resize

இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. “ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது.
தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல் உள்ளார்.
இந்நிலையில் விரைவில், டிடிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் தீயாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, இது முற்றிலும் வந்தந்தியாம். எனவே... டிடி இதனை சற்றும் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல் அவரது வேலையை பார்த்து வருகிறார்.

Latest Videos

click me!