கீர்த்தி சுரேஷூக்கும் அனிருத்திற்கும் விரைவில் திருமணமா?... வைரல் போட்டாஸால் தீயாய் பரவும் செய்தி...!

First Published | Feb 10, 2021, 6:17 PM IST

கீர்த்தி சுரேஷ் - அனிருத் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சோசியல் மீடியாவில் பரவி வரும் தகவல் உண்மையா? என பார்க்கலாம்...

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதையடுத்து தளபதி 65 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.
அதையடுத்து சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்த “செல்லம்மா... செல்லம்மா...” பாடல் சோசியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டானது. இதையடுத்து அந்த பாடலைப் பாடிய ஜோனிடா காந்திக்கும், அனிருத்துக்கும் இடையே காதலர் மலர்ந்து விட்டதாக கூட தகவல்கள் வெளியாகின. ஆனால் அவை முற்றிலும் வதந்தி என பின்னர் தெரியவந்தது.
Tap to resize

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் - அனிருத் இடையே காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனிருத் பிறந்தநாளின் போது அவருக்கு வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ், அவர் தன் தோள் மீது கைபோட்டு நின்றபடி ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதுபோதாத வதந்தியை கொளுத்தி போடுபவர்களுக்கு, இருவரும் காதலிப்பதாக கிளப்பிவிட்டனர்.
தற்போது உச்சகட்டமாக இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. ஆனால் அனிருத் - கீர்த்தி சுரேஷ் இடையே காதல் எல்லாம் கிடையாது என்றும், திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும் அவர்களுடைய நெருங்கியவர்களின் வட்டாரத்தில் இருந்து கூறப்படுகிறது. இனியாவது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தால் சரி...!

Latest Videos

click me!