தல ஃபேன்ஸுக்கு இன்று இரவு காத்திருக்கும் செம்ம ட்ரீட்... ‘வலிமை’ முதல் பாடலின் முதல் வரி இதுவா?

Published : Aug 02, 2021, 11:53 AM ISTUpdated : Aug 02, 2021, 01:53 PM IST

இன்று காலை வலிமை படம் குறித்த மற்றொரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV
16
தல ஃபேன்ஸுக்கு இன்று இரவு காத்திருக்கும் செம்ம ட்ரீட்... ‘வலிமை’ முதல் பாடலின் முதல் வரி இதுவா?
Valimai

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் காம்பினேஷனில் உருவாகி வருகிறது ‘வலிமை’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றி வருகிறார். 

26

valimai

இந்தப் படத்திற்கு 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி பூஜை போட்டதோடு சரி, போனிகபூர் அப்டேட் கொடுப்பதையே மறந்துவிட்டார். இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் போனிகபூரை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டும் அளவிற்கு சென்றனர். 

36

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தின் ஷூட்டிங் கிட்டதட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் தல அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது தான் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ஒரே ஒரு அறிவிப்பு. 

அத்தோடு பொது இடங்களில் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டு போர்டும் கையுமாக சுற்ற ஆரம்பித்தனர். இப்படி தல ஃபேன்ஸ் செய்த தாறுமாறு காரியங்களால் கடுப்பான அஜித், நாங்களே அப்டேட் தருவோம் அதுவரைக்கும் அமைதியாகவும், கண்ணியமாகவும் நடத்துக்கோங்க என கண்டித்தார்.

46

அதனால் சிறிது காலம் அமைதியாக இருந்தவர்கள் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்தனர். இனியும் தாமதம் செய்தால் பிரச்சனையை  சமாளிக்க முடியாது என நினைத்த வலிமை படக்குழு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கடந்த 11ம் தேதி  மணிக்கு மோஷன் போஸ்டர் மற்றும் சில ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டனர். 

56
Valimai

டிசைன் மற்றும் கிராபிக்ஸில் சில குறைகள் இருந்தாலும் ஒன்றரை வருடத்திற்கு பிறகு அப்டேட் கிடைத்ததே போதும் என தல ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாட ஆரம்பித்தனர். 

66
Valimai

இந்நிலையில் இன்று காலை வலிமை படம் குறித்த மற்றொரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது வலிமை படத்தில் இருந்து முதல் பாடலை இன்று இரவு 10 மணி அளவில் படக்குழு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடலின் முதல் வரி ‘நாங்க வேற’ என தொடங்க உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து  #ValimaiFirstSingle என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

click me!

Recommended Stories