எங் லுக்கில் தல அஜித்... கையில் இருக்கும் காயத்தை பார்த்து கலங்கும் ரசிகர்கள்... லேட்டஸ்ட் போட்டோ...!

First Published | Oct 29, 2020, 11:26 AM IST

ஃபிட்னஸில் வேற லெவலுக்கு மெருகேறி எங் லுக்கில் இருக்கும் தல அஜித்தின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தாலும், அந்த போட்டோவில் அவர்களுக்கு வேறு ஒரு அதிர்ச்சியும் காத்திருக்கிறது. 

நேர்கொண்ட பார்வை படத்தின் சூப்பர் ஹிட்டத்தை தொடர்ந்து அஜித், இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் வலிமை.
இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், சில பைக் சேசிங் காட்சிகள் சென்னை புறநகர் பகுதியிலும் நடைபெற்றது.
Tap to resize

வலிமை பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், மாஸ் சண்டை காட்சிகளை படமாக்க படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
சமீபத்தில் வலிமை படத்தின் ஷூட்டிங் சென்னை ஆரம்பமானது. அதில் வில்லன் நடிகர் கார்த்திகேயா பங்கேற்ற புகைப்படங்கள் வைரலாகின. மேலும் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
தற்போது ஐதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. அஜித்தை பார்க்கும் ஆசையில் அங்கு ரசிகர்கள் குவிந்தார்கள்.
அப்படி தன்னை காண வரும் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி #Valimai என்ற ஹேஷ்டேக்கையும் தல ரசிகர்கள் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஃபிட்னஸில் வேற லெவலுக்கு மெருகேறி எங் லுக்கில் இருக்கும் தல அஜித்தின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தாலும், அந்த போட்டோவில் அவர்களுக்கு வேறு ஒரு அதிர்ச்சியும் காத்திருக்கிறது.
கண்ணாடி அணிந்து செம்ம ஸ்மார்ட் லுக்கில் இருக்கும் தல அஜித்தின் கையில் சற்று பெரிய காயம் ஏற்பட்டதற்காக தழும்பு காணப்படுகிறது. அதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் உங்கள் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கிய தல பத்திரமாக இருங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Latest Videos

click me!