"என்னை அறிந்தால்", "விஸ்வாசம்" ஆகிய படங்களில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா தற்போது போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார். மார்டன் டிரஸ், புடவை என அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவரை ஓரம் கட்டுவதற்காக தற்போது மற்றொரு குழந்தை நட்சத்திரம் களத்தில் இறங்கியுள்ளார்.
சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான "சில்லுனு ஒரு காதல்" படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்த ஸ்ரேயா ஷர்மாவை நியாபகம் இருக்கா?, அவங்க தான் இப்போ களம் இறங்கியிருக்குற புது போட்டியாளர்.குழந்தை நட்சத்திரமாவே இருந்தாலும் "சில்லுனு ஒரு காதல்" படத்தில் ஸ்ரேயா ஷர்மாவின் அசத்தல் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இறுதியாக ரஜினிகாந்தின் எந்திரன் படத்தில் இடம் பெற்ற கிளைமேக்ஸ் காட்சியில் பார்த்தது. அதன் பின்னர் சில படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷரியா, தற்போது இளம் நடிகையாக டோலிவுட்டில் வலம் வருகிறார்.
டோலிவுட்டில் நடிக்க போயிட்டு கவர்ச்சி இல்லைன்னா எப்படின்னு யாரோ சொல்லி இருப்பாங்க போல. அதனால் அதிரடி முடிவெடுத்த ஸ்ரேயா, ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் ஸ்ரேயா ஷர்மா வெளியிட்ட அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளனர்.
லாக்டவுன் நேரத்தில் கொஞ்சமாக உடல் எடை கூடி கொழுக், மொழுக் என மாறியுள்ள ஸ்ரேயா சர்மா இஷ்டத்துக்கு கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார்.
மொட்டை மாடியில் சட்டையை கழட்டிவிட்டு, டைட் டிஷர்ட், ஜீன்ஸ் சகிதமாக போஸ் கொடுத்து லைக்குகளை குவித்துள்ளார்.
முன்னணி நடிகைகளுக்கு இணையாக படுகவர்ச்சியாக போட்டோ எடுத்து அதனை சோசியல் மீடியாவிலும் பகிர்ந்து வருகிறார்.
சில நெட்டிசன்கள் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் பண்ணுங்க என கண்டித்து வருகின்றனர்.