ரோட்டு கடையில் சாப்பிட்ட தல அஜித்... தாறுமாறு வைரலாகும் புகைப்படம்...!

அப்படி பைக்கிலேயே வாரணசி சென்ற அஜித், அங்குள்ள ரோட்டு கடை ஒன்றில் சாட் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக பூஜை போட்ட அன்று சொன்னதோடு சரி, அதன் பிறகு எந்த அப்டேட்டும் சொல்லமாட்டேன் என விடப்பிடியாக இருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.
அடுத்து அவர் கூட படம் பண்ணாதீங்க தல என அஜித்திற்கு அவருடைய ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் அளவிற்கு காண்டாகிவிட்டனர். அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமும் அப்டேட் கேட்டு அலுத்து போய்விட்டனர்.

அப்டேட் கேட்டு காத்திருந்தவர்களுக்கு விருந்தாக வலிமை திரைப்படம் அம்மா - மகன் சென்டிமென்ட் ப்ளஸ் ஆக்‌ஷன் கதை என்பது மட்டுமே காத்து வாக்குல செய்தியாக கிடைத்தது.
ஹெச்.வினோத்திற்கு குழந்தை பிறந்ததற்காக வாழ்த்து கூறிய அஜித் ரசிகர்கள் அனைவரும் அடுத்த கேட்ட கேள்வி அப்டேட் எப்போ பாஸ்? என்பது தான். புனேவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இயக்குநர் ஹெச்.வினோத் தனக்கு குழந்தை பிறந்ததால் சென்னை வந்துள்ளார். மீண்டும் ஜனவரி 22ம் தேதி ஷூட்டிங்கிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். இந்த கேப்பில் தான் அஜித் ஒரு பக்கா பிளானை செய்து வருகிறார்.
இப்படி தமிழக முதலமைச்சரிடம் ஆரம்பித்து மூக்குத்தி அம்மன் வரை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்களுக்கு அவரைப் பற்றிய தகவல் ஒன்று விருந்தாக அமைந்துள்ளது.
அஜித்திற்கு பைக் ரைடு என்றால் எவ்வளவு பிடிக்கும் என சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. தற்போது ஷூட்டிங்கில் சிறிது இடைவெளி கிடைத்துள்ளதால், சிக்கிமிற்கு பைக்கிலே ரைடு கிளம்பியுள்ளாராம் அஜித். மொத்தம் 4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பைக்கிலேயே டிராவல் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
அப்படி பைக்கிலேயே வாரணசி சென்ற அஜித், அங்குள்ள ரோட்டு கடை ஒன்றில் சாட் வாங்கி சாப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த கடை ஓனர் உடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!