தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பெரிய பட்ஜெட் படங்களைக் காட்டிலும் சிறு பட்ஜெட் படங்கள் தான் சக்கைப்போடு போட்டுள்ளன. இதுவரை தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் டாப் 10 இடம்பிடித்த படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யங்களும் நிறைந்த ஆண்டாக உள்ளது. அதிர்ச்சி என்றால், இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை. அதே நேரத்தில் ஆச்சர்யம் என்னவென்றால், இதுவரை முடிந்துள்ள மூன்று மாதங்களிலும் சிறு பட்ஜெட் படங்கள் தொடர்ச்சியாக தூள்கிளப்பி உள்ளன. அதனால் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 3 மாதம் முடிவில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
211
மை லார்ட்
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்த படம் மை லார்ட். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை ஒட்டி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூலில் சோபிக்காத இப்படம் தமிழ்நாட்டில் ரூ.3.35 கோடி வசூல் அள்ளி 10ம் இடத்தில் உள்ளது.
311
கில்லி ரீ-ரிலீஸ்
தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 9-ம் இடத்தில் உள்ள படம் கில்லி ரீ-ரிலீஸ் தான். விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான இது கடந்த 2024-ம் ஆண்டு ரீ-ரிலீஸ் ஆனபோது அதற்கு 50 கோடிக்கு மேல் வசூல் கிடைத்தது. ஆனால் இம்முறை பிப்ரவரி மாதம் ரீ-ரிலீஸ் ஆனபோது வெறும் ரூ.3.4 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
2026-ம் ஆண்டின் ஒரு டிசாஸ்டர் படம் என்றால் அது வா வாத்தியார் தான். கார்த்தி நாயகனாக நடித்த இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் கார்த்தி எம்ஜிஆர் ஆக நடித்திருந்தார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. ஆனால் வசூலை பொறுத்தவரை ரூ.10.75 கோடி வசூல் செய்து 8-ம் இடத்தில் உள்ளது.
511
மங்காத்தா ரீ-ரிலீஸ்
2026-ம் ஆண்டு அமோக வரவேற்பை பெற்ற ரீ-ரிலீஸ் படம் என்றால் அது மங்காத்தா தான். இப்படம் ஜனவரி மாதம் 23ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆன புதுப்படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின, ஆனால் மங்காத்தா திரைப்படம் ரூ.15.65 கோடி வசூல் செய்து 7-ம் இடத்தில் உள்ளது.
611
துரந்தர் 2
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன துரந்தர் 2 திரைப்படம் தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படம் இந்த லிஸ்ட்டில் 6ம் இடத்தில் உள்ளது.
711
வித் லவ்
ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா தயாரிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான வித் லவ் திரைப்படம் இந்த பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது. இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாகவும், அனஸ்வரா ராஜன் நாயகியாகவும் நடித்திருந்தனர். இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.28.5 கோடி வசூல் செய்திருந்தது.
811
தலைவர் தம்பி தலைமையில்
2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த படம் என்றால் அது தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் தான். இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார். இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.32.25 கோடி வசூல் செய்து 4ம் இடத்தில் உள்ளது.
911
யூத்
கென் கருணாஸ் இயக்கத்தில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் யூத். இப்படத்தில் கென் கருணாஸ் உடன் தேவதர்ஷினி, சூரஜ் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் தற்போது வரை தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.40.18 கோடி வசூல் செய்து 3ம் இடம்பிடித்துள்ளது.
1011
பராசக்தி
அதிக வசூல் அள்ளிய படங்களில் இரண்டாம் இடத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.57.5 கோடி வசூலித்திருந்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
1111
தாய் கிழவி
2026-ம் ஆண்டு தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை வாரிசுருட்டிய படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள படம் தாய் கிழவி. ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருந்தார். இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.58.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.