பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை பற்றி கேள்விப்பட்டதும் பாண்டியன் கதறி அழுதுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கோமதி வீட்டில் கிச்சனில் வேலை பார்க்கும் போது ஸ்டூலில் ஏறி பொடி எடுக்க முயன்றபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு தவறிவிழுகிறார். அப்போது என்னங்க என அழைத்தும் அவர் மீதுள்ள கோபத்தால், கேட்காதபடி கிளம்பி கடைக்கு சென்றுவிடுகிறார் பாண்டியன். இதையடுத்து சரவணன் வீட்டுக்கு வந்த பின்னர் தான் கோமதி மயங்கி கிடப்பதை பார்க்கிறார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறார். விஷயம் தெரிந்ததும் பாண்டியனும் கடையை அடைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு விரைகிறார். இதன் பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
டாக்டர் கேட்ட கேள்வி
மருத்துவமனையில் கோமதியை பரிசோதித்த டாக்டர் வெளியே வந்து, அவங்களுக்கு இந்த அளவுக்கு பிரசர், பிபி எல்லாம் கீழே போயிருக்கு, நீங்க கவனிக்கவே இல்லையா? அவங்க மாத்திரை ரெகுலரா சாப்பிடுறாங்களா இல்லையா? ஏன் நீங்க யாருமே கவனிக்கல என கேட்கிறார். அதுமட்டுமில்லாமல் அவங்க எவ்வளவு நேரமா மயங்கி கிடந்தாங்க என கேட்கிறார். அதற்கும் பாண்டியனிடம் பதில் இல்லை. இன்னும் கோமதிக்கு மயக்கம் தெளியவில்லை என டாக்டர் சொல்லிவிடுகிறார். அதுமட்டுமின்றி அவரை உள்ளே சென்று பார்க்கவும் அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனால் பாண்டியன் என்ன செய்வதென்றே தெரியாமல், அழுதுகொண்டே அமர்ந்திருக்கிறார்.
35
கதறி அழுத பாண்டியன்
அதன்பின்னர் பாண்டியனை சமாதானப்படுத்தும் மீனா, அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேபோல் வீட்டிலும் கோமதி மயக்கம் போட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள விஷயம் தெரிந்ததும், அரசி, காந்திமதி, ராஜி என எல்லோரும் பதறிப்போய் அழுகிறார்கள். இதையடுத்து ஆஸ்பத்தியில் இருக்கும் பாண்டியனிடம் வந்து பேசும் நர்ஸ், ரெண்டு ரெண்டுபேரா போய் பார்க்கலாம் என சொல்கிறார். முதலில் சரவணனும், பாண்டியனும் உள்ளே செல்கிறார்கள். உள்ளே போனதும் பாண்டியன், கோமதி... கோமதி என அழைக்கிறார். அவர் கண்விழிக்காததால் கதறி அழுகிறார்.
அதன்பின்னர் டாக்டர் வந்து செக் பண்ணுகிறார். சிறிது நேரத்தில் மீனாவும், கதிரும் சென்று பார்க்கிறார்கள். அப்போது மீனாவுக்கு போன் போடும் செந்தில், நாங்களும் வந்து பார்க்கலாமா என கேட்க, அதற்கு மீனா, இல்ல இப்போ இங்க யாரும் வர வேண்டாம். நிறைய பேர் இருக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க. அதனால் யாரும் வராதீங்க என சொல்லிவிடுகிறார். கொஞ்ச நேரத்தில், கதிரும், மீனாவும் சரவணிடம் நீங்க பாண்டியனை வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க என சொல்கிறார்கள். அதற்கு பாண்டியன் நான் இங்கேயே இருக்கேன் என சொல்கிறார். அதற்கு மீனா, நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க, வீட்டுக்கு போங்கனு சொல்லி அனுப்பி வைக்கிறார்.
55
குற்ற உணர்ச்சியால் குமுறும் பாண்டியன்
பாண்டியன் வீட்டுக்கு வந்த பின்னர் யாரிடமும் எதுவும் பேசாமல் ரூமுக்குள் சென்றுவிடுகிறார். அப்போது ரூமில் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறார். கோமதி அழைத்தபோது சென்று பார்த்திருந்தால், இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என நினைத்து கண்ணீர் சிந்துகிறார். நாம தான் தப்பு பண்ணிட்டோம், அவ நமக்காக எவ்வளவோ பண்ணீருக்கா, அதையெல்லாம் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்காம இப்படி பண்ணிட்டோமே என குற்ற உணர்ச்சியால் குமுறுகிறார் பாண்டியன். அதன்பின் உள்ளே வரும் சரவணன், அம்மா சரியாகிடுவாங்க, என சொல்லி அட்வைஸ் பண்ணுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.