தெலுங்கில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் ராஷ்மி கவுதம். நடனத்திலும் சிறந்து விளங்கும் இவர், கடந்த 2011-ம் ஆண்டு ஷாந்தனு நடிப்பில் வெளியான ‘கண்டேன்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் டோலிவுட் பக்கம் சென்றார்.
அங்கு வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக குண்டூர் டாக்கீஸ் என்கிற படத்தில் கவர்ச்சியாக நடித்து அனைவரையும் ஆச்சர்யபடுத்தினார். இப்படம் ‘இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு’ என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மி கவுதம், சமந்தா பாணியில் ஒரு ஐட்டம் சாங்கிற்கு நடனமாடி உள்ளார். சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் போலா ஷங்கர் என்கிற படத்திற்காக அவர் ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளார். இது அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.
நடிகை ராஷ்மி கவுதம், அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கம். ஏற்கனவே தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரை இவர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. ஆனால், இதனை இருவரும் மறுத்ததோடு, தாங்கள் நண்பர்களாகப் பழகி வருவதாக கூறி சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்நிலையில், தற்போது நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக் டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. தொழில் அதிபர் ஒருவரை அவர் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் செட்டில் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மி, இதுவரை இந்த ரகசிய திருமணம் குறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் உள்ளதால், அது உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.