Maaran Movie Dhanush : மாறன் படத்தை புறக்கணிக்கும் தனுஷ்.... எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு விஷயம் தான்..!

Ganesh A   | Asianet News
Published : Jan 25, 2022, 06:46 AM IST

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாறன் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.

PREV
15
Maaran Movie Dhanush : மாறன் படத்தை புறக்கணிக்கும் தனுஷ்.... எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு விஷயம் தான்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் மாறன். துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.

25

மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

35

இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடப்பட உள்ளது. பொல்லாத உலகம் என பெயரிடப்பட்டுள்ள அப்பாடலை தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடி உள்ளனர். இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாறன் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.

45

தியேட்டர் ரிலீசுக்காக தயாரான இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட உள்ளதால் நடிகர் தனுஷ் கடும் அப்செட்டில் உள்ளாராம். தியேட்டரில் வெளியிட வேண்டும் என்ற தனது முடிவுக்கு தயாரிப்பு தரப்பு மதிப்பளிக்காததால், இப்படத்தை அவர் புறக்கணித்து வருகிறாராம். வழக்கமாக தனது படங்கள் குறித்து எந்த அப்டேட் வந்தாலும், அதனை சமூக வலைதளங்களில் பகிர்வார் தனுஷ், ஆனால் மாறன் படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் அவர் வெளியிடுவதில்லை.

55

ஏற்கனவே ஜகமே தந்திரம் படத்திற்கும் அவர் இப்படி தான் செய்து வந்தார். அப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. இதனை துளியும் விரும்பாத தனுஷ், அப்படத்தை புறக்கணித்து வந்தார். தற்போது அதே பாணியில் மாறன் திரைப்படம் வெளியாக உள்ளதால், இப்படத்தையும் தனுஷ் புறக்கணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories