Ashwin Kumar : 40 கதை கேட்டு தூங்கிய அஸ்வினின்... தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை - யார் தெரியுமா?

Ganesh A   | Asianet News
Published : Jan 25, 2022, 06:10 AM ISTUpdated : Jan 25, 2022, 06:11 AM IST

பொங்கல் பண்டிகையை ஒட்டி அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம்.

PREV
15
Ashwin Kumar : 40 கதை கேட்டு தூங்கிய அஸ்வினின்... தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை - யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். இந்நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சத்தை பெற்ற அஸ்வினுக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு இணையாக இவருக்கும் பாலோவர்கள் கிடைத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

25

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் அஸ்வினுக்கு பட வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற படத்தில் நடித்து முடித்தார் அஸ்வின். சமூக வலைதளங்களில் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்த அஸ்வின், கடந்த மாதம் நடந்த என்ன சொல்ல போகிறாய் (Enna Solla Pogirai) படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சால் கடும் எதிர்ப்பை சம்பாதித்தார்.

35

கதை கேட்கும் போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்றும் அவ்வாறு இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என அவர் பேசியதைக் கேட்டு கோலிவுட்டே கொந்தளித்தது. ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு ஆணவப் பேச்சு தேவையா என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நெட்டிசன்களும் மீம் போட்டு கலாய்த்தனர்.

45

கடந்த சில தினங்களுக்கு முன் பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். 40 கதையை கேட்டு தூங்கியதைப் போல் இந்த படத்தின் கதைக்கும் தூங்கி இருக்கலாம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது.

55

இந்நிலையில், நடிகர் அஸ்வின், தனக்கு மிகவும் பிடித்த நடிகை தீபிகா படுகோன் என்றும், தன்னுடைய கனவுக் கன்னியும் அவர் தான் எனவும் கூறி உள்ளார். மேலும் அவருடைய டான்ஸ், நடிப்பு, ஸ்டைல் எல்லாமே தனக்கு பிடிக்கும் எனவும் அஸ்வின் கூறி உள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories