வாரிசு, துணிவு படங்கள் கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியான போது, துணிவு படத்துக்கு அதிகாலை 1 மணிக் காட்சியும், வாரிசு படத்துக்கு அதிகாலை 4 மணிக் காட்சியும் திரையிடப்பட்டது. இவ்வாறு அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்ட போது இருதரப்பு ரசிகர்களிடையே சில இடங்களில் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் இந்த மோதல் எல்லைமீறி சென்றது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இருதரப்பு ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டதால் அங்குள்ள பேனர்கள் கிழித்தெறியப்பட்டன. அதுமட்டுமின்றி அந்த தியேட்டரையும் அடித்து சேதப்படுத்தினர். இதையடுத்து நிலைமை எல்லைமீறி சென்றதால் தடியடி நடத்தி இருதரப்பு ரசிகர்களையும் போலீசார் விரட்டி அடித்த சம்பவங்களும் அரங்கேறின.
இதையும் படியுங்கள்... கோவிலுக்குள் செல்ல நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு... ரோட்டில் இருந்தே தரிசனம் செய்ய வற்புறுத்தியதாக புகார்