மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட ஆக்ஷன் எடுக்கப்பட்டு உள்ளது.
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னிடம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி கர்ப்பமான பின்னர் அவரை ஏமாற்றி இருக்கிறார். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.
24
ஜாய் கிரிசில்டா புகார்
இந்த நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே தன்னைப்பற்றி அவதூறு பரப்ப ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்ககோரி நீதிமன்றத்தை நாடினார் மாதம்பட்டி. ஆனால் அவருக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
34
மகளிர் ஆணையத்தில் புகாரளித்த ஜாய்
இதனிடையே தான் காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்செட் ஆன ஜாய் கிரிசில்டா, கடந்த வாரம் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில், புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், மாதம்பட்டி ரங்கராஜ் திருமண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, அவர் தன்னைப்போல் 10 பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் கூறி அதிர வைத்தார் ஜாய் கிரிசில்டா.
இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி நாளை (அக்டோபர் 15) மகளிர் ஆணையத்தில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல் ஜாய் கிரிசில்டாவும் நாளை ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. நாளை மாதம்பட்டி ரங்கராஜ், விசாரணைக்கு ஆஜர் ஆவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.