பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் வாரமே மக்கள் மத்தியில் கம்மியான ஓட்டு வாங்கியதால் எலிமினேட் செய்யப்பட்ட பிரவீன் காந்திக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரவாரமின்றி கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் இடம்பெற்று இருப்பார்கள். ஆனால் இந்த முறை ஆள் தேர்விலேயே பிக் பாஸ் டீம் கோட்டைவிட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அது முதல் வாரத்திலேயே தெரிந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஐந்தாவது நாளிலேயே தனக்கு இங்கு இருக்க விருப்பமில்லை எனக்கூறி நந்தினி வெளியேறினார். அவரின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானது. நல்ல வாய்ப்பை இப்படி வேஸ்ட் பண்ணிவிட்டாரே என பலரும் நந்தினியை திட்டினர்.
24
முதல் எலிமினேஷன்
நந்தினி வெளியேறியதால் பிக் பாஸ் வீட்டில் முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது என்று தான் அனைவரும் கருதினார்கள். ஆனால் அதில் ட்விஸ்ட் வைத்த விஜய் சேதுபதி, எலிமினேஷன் இருப்பதை உறுதி செய்ததோடு, மக்களிடம் கம்மியான வாக்குகளை வாங்கி எலிமினேட் ஆன போட்டியாளர் யார் என்பதையும் அறிவித்தார். அதன்படி இயக்குனர் பிரவீன் காந்தி தான் முதல் வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டார். எலிமினேட் ஆன பின்னர் அவர் செய்த அலப்பறையை இதுவரை எந்த ஒரு போட்டியாளரும் செய்ததில்லை. வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களையும் உள்ளே துரத்திவிட்டு வெளியே சென்றார் பிரவீன் காந்தி.
34
சம்பளம் எவ்வளவு?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளராக பிரவீன் காந்தி தான் இருந்து வந்தார். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.35 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்ததாம். அவர் மொத்தம் இருந்த 7 நாட்களுக்கு சேர்த்து அவருக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். ஒரு வாரம் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் பல்க் ஆன தொகையுடன் பிரவீன் காந்தி எலிமினேட் ஆகி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குனர் பிரவீன் காந்தி, நாகார்ஜுனா நடித்த ரட்சகன், பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி, பிரசாந்த், ஜோதிகா நடித்த ஸ்டார் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆவார். அந்த மூன்று படங்களுக்கு பின்னர் ஆள் அட்ரஸே தெரியாமல் தொலைந்து போன பிரவீன் காந்தி, பிக் பாஸ் மூலம் தனக்கு புகழ் வெளிச்சம் கிடைக்கும் என எதிர்பார்த்து பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார். ஆனால் அவரின் கனவை ஒரே வாரத்தில் தகர்த்துவிட்டார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே, தான் ரட்சகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறி இருந்தார். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.