ஒரே மாதத்தில் 3 முக்கிய சீரியல்களை இழுத்து மூடும் ஜீ தமிழ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published : Oct 14, 2025, 01:01 PM IST

சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, ஒரே மாதத்தில் மூன்று முக்கிய சீரியல்களை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

PREV
14
3 Zee Tamil Serials End Soon

சின்னத்திரையில் சீரியல்களின் கிங் ஆக சன் டிவி ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சன் டிவிக்கு விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் செம டஃப் கொடுத்து வருகின்றன. இதனால் டாப் 10 டிஆர்பி ரேஸிலும் சன் டிவிக்கு நிகராக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கம்மியான டிஆர்பி ரேட்டிங்கை பெற்று வந்த மூன்று சீரியல்களை இழுத்து மூட முடிவெடுத்து உள்ளது. அந்த மூன்று சீரியல்களின் கிளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அது என்னென்ன சீரியல்கள் என்பதை பார்க்கலாம்.

24
கெட்டி மேளம்

ஜீ கன்னடத்தில் ஒளிபரப்பான லட்சுமி நிவாஸா சீரியலின் ரீமேக்காக ஜீ தமிழில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் கெட்டி மேளம். பொன்வண்ணன், சாயா சிங், பிரவீனா நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் நல்ல கதைக்களத்தோடு ஒளிபரப்பாகி வந்தபோதும் அதற்கு எதிர்பார்த்த அளவு டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததால் தற்போது முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார்களாம். இதனால் விரைவில் இதன் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

34
நினைத்தாலே இனிக்கும்

ஜீ தமிழில் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நினைத்தாலே இனிக்கும் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் போகப் போக கதைக்களம் சொதப்பியதால் அதன் டிஆர்பி ரேட்டிங்கும் கம்மியாக தொடங்கியது. இதனால் வேறுவழியின்றி அந்த சீரியலையும் இந்த மாதத்தில் முடிவுக்கு கொண்டு வர உள்ளார்களாம்.

44
மாரி

ஜீ தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் மாரி. அமானுஷ்ய சக்தியை கொண்ட மாரி குடும்பத்தினரால் கைவிடப்படுகிறார். அதன்பின் என்ன ஆனது என்பது தான் கதை. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த சீரியலும் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த சீரியலுக்கும் எண்டு கார்டு போட முடிவெடுத்துள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி. இந்த சீரியலின் கிளைமாக்ஸும் விரைவில் வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories