Kanguva
பொதுவாகவே பெரிய நடிகர்களின் படம் என்றாலே அதற்கு அதிகாலை காட்சிகள் நிச்சயம் இருக்கும். இந்த அதிகாலை காட்சிகள் பெரும்பாலும் ரசிகர்கள் ஷோவாகவே இருக்கும். இதில் விசில் பறக்க படம் பார்ப்பதே தனி ஃபீலிங் தான். மேலும் இந்த அதிகாலை காட்சிகள் அப்படத்தின் வசூலையும் பூஸ்ட் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த அதிகாலை 4 மணிக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
Kanguva Suriya
அதற்கு முக்கிய காரணம் விஜய், அஜித் ரசிகர்கள் தான். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்த வாரிசு படமும் அஜித் நடித்த துணிவு படமும் ரிலீஸ் ஆகின. அந்த இரண்டு படங்களுக்குமே அதிகாலை காட்சி திரையிடப்பட்டன. இதில் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கும், வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டன. இதற்காக அதிகாலையிலேயே சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் அந்த வழியாக சென்ற லாரி மீது ஏறி ஆட்டம் போட்டனர். அதில் ஒரு ரசிகர் லாரியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையும் படியுங்கள்... கங்குவாவின் 1000 கோடி வசூல் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட அமரன்! தடைகளை தாண்டி சாதிப்பாரா சூர்யா?
Kanguva FDFS
இந்த சம்பவத்துக்கு பின்னர் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சியை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் நடைமுறையில் இருந்தாலும் தமிழ்நாட்டில் அதற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இதனிடையா சூர்யா நடிப்பில் வருகிற நவம்பர் 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள கங்குவா திரைப்படத்தின் அதிகாலை காட்சியை திரையிட தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
Kanguva Movie Special Show in Tamilnadu
அந்த கோரிக்கை மனுவில் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தேதிகளிலும் அதிகாலை 5 மணிக்கு அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த தமிழக அரசு தினசரி ஒரு காட்சி கூடுதலாக திரையிட அனுமதி அளித்துள்ளதோடு, காலை 9 மணிக்கு முதல் காட்சியை தொடங்கவும் அனுமதி அளித்திருக்கிறது. இதன்மூலம் கங்குவா திரைப்படம் தமிழ்நாட்டில் வருகிற நவம்பர் 14-ந் தேதி முதல் ஷோ வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... கங்குவா படத்துக்காக மிகவும் கம்மி சம்பளம் வாங்கிய சூர்யா - அதுக்குன்னு இவ்வளவுதானா?