மக்கள் மனதில் நீங்காத இடம்.. ஆண்டுகள் கடந்து அசால்ட்டாக ஓடிவரும் டாப் தமிழ் சீரியல்கள் - ஒரு லுக்!

First Published | Jul 30, 2023, 4:21 PM IST

வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு இருக்கும் அதே மனசு, சின்னத்திரை நாடகங்களில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் இருக்கிறது என்று கூறினால் அது சற்றும் மிகையல்ல. அந்த அளவிற்கு ஒவ்வொரு இல்லங்களிலும் தற்பொழுது சின்னத்திரை நடிகர்கள் தங்களை தடத்தை தொடர்ச்சியாக பதித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, மக்களால் பெரிய அளவில் விரும்பப்பட்ட நிலையில், ஆயிரம் எபிசோடுகளையும் கடந்து பல நாடகங்கள் மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ் மொழியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து, பல வருண்டங்களாக ஓடிக் கொண்டிருக்கும் டாப் 3 சின்னத்திரை நாடகங்களை குறித்து இந்த பதிவில் காணலாம்.

பாண்டவர் இல்லம்.. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கிய இந்த நாடகம், சுமார் 4 ஆண்டுகளாக 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிவருகின்றது. சுந்தரம் மற்றும் அவரது ஐந்து பேரன்களான ராஜா சுந்தரம் பாண்டவர், நல்ல சுந்தரம் பாண்டவர், அழகு சுந்தரம் பாண்டவர், அன்பு சுந்தரம் பாண்டவர் மற்றும் குட்டி சுந்தரம் பாண்டவர் பற்றி ஒரு சுவாரசியமான கதை இது.

தோனிக்கு ஆப்பு... சந்தானம் தான் டாப்பு! LGM மற்றும் டிடி ரிட்டன்ஸ் படங்களின் 2-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அடிக்கடி இதில் நடிக்கும் நடிகர்கள் மாற்றப்பட்டாலும், இந்த தொடருக்கான வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை என்று தான் கூறவேண்டும். நான்கு சகோதரர்களின் ஒற்றுமையைப் பற்றிய ஒரு கதைக்களம். கடந்த 2018ம் ஆண்டு துவங்கிய இந்த நாடகமும் சுமார் 5 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Tap to resize

ரெட்டை ரோஜா..1000 எபிசோடுகளை கடந்த ஓடிக்கொண்டிருக்கும் இன்னொரு வெற்றிகரமான நாடகம் தான் இது. இந்த தொடரில் சாந்தினி தமிழரசன் மற்றும் அக்‌ஷய் கமல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மற்றும் பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இந்த நாடகம் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிவருகின்றது.  

தமன்னாவை ஓரங்கட்டி... டிரெண்டிங்கில் இடம்பிடித்த ரம்யா கிருஷ்ணனின் காவாலா டான்ஸ் - 52 வயசுல என்னமா ஆடுறாங்க!

Latest Videos

click me!