தோனிக்கு ஆப்பு... சந்தானம் தான் டாப்பு! LGM மற்றும் டிடி ரிட்டன்ஸ் படங்களின் 2-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

First Published | Jul 30, 2023, 4:02 PM IST

தமிழ் சினிமாவில் ஜூலை 28-ந் தேதி திரைக்கு வந்த தோனியின் எல்.ஜி.எம் மற்றும் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் ஆகிய திரைப்படங்களின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

LGM, DD returns

தமிழ் சினிமாவில் கடந்த ஜூலை 28-ந் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன திரைப்படங்கள் தான் எல்.ஜி.எம் மற்றும் டிடி ரிட்டன்ஸ். ரிலீசுக்கு முந்தைய நிலவரப்படி எல்.ஜி.எம் படத்துக்கு தான் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் இது தோனி தயாரித்துள்ள படம். இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார் தோனி. சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகமாக வெளிவந்துள்ளது.

இதில் எல்.ஜி.எம் திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லவ் டுடே படத்தின் நாயகி இவானா நடித்திருந்தார். இவர்களுடன் யோகிபாபு, நதியா, ஆர்.ஜே.விஜய் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். திருமணத்துக்கு முன் மாமியாரும் மருமகளும் சேர்ந்து ட்ரிப் செல்லும் போது நடக்கும் கலாட்டா தான் இப்படம். கதை கேட்கும் போது வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதையில் சொதப்பியதால் இப்படத்திற்கு சுமாரான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.

வசூலை பொறுத்தவரை தோனியின் எல்.ஜி.எம் திரைப்படம் இரண்டு நாட்களில் வெறும் ரூ.2 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. சுமார் 10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் அதில் பாதி வசூலிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதன்மூலம் தோனிக்கு தயாரிப்பாளராக செம்ம அடி விழவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தமன்னாவை ஓரங்கட்டி... டிரெண்டிங்கில் இடம்பிடித்த ரம்யா கிருஷ்ணனின் காவாலா டான்ஸ் - 52 வயசுல என்னமா ஆடுறாங்க!

Tap to resize

மறுபுறம் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை பிரேம் ஆனந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். சுரபி ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், லொள்ளு சபா மனோகர், மாறன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடி காட்சிகள் நிறைந்துள்ளதால் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  முதல் நாளில் ரூ.2.8 கோடி வசூலித்திருந்த இப்படம் இரண்டாம் நாளில் அதற்கு டபுள் மடங்கு வசூலை வாரிக்குவித்து உள்ளது. இப்படம் இரண்டு நாள் முடிவில் மொத்தமாக உலகளவில் ரூ.6 கோடி வசூலித்து உள்ளதாம். ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த வார பாக்ஸ் ஆபிஸில் சந்தானம் தான் டாப்பில் உள்ளார்.

இதையும் படியுங்கள்... அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் ‘வாரிசு’ விஜய்யின் அம்மா..!

Latest Videos

click me!