
2025-ம் ஆண்டின் ஆறு மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆறு மாதத்திற்குள் தமிழ் சினிமா அடியெடுத்து வைக்கிறது. அதில் ஜூலை மாதம் ஏராளமான தமிழ் படங்களின் அப்டேட்டுகள் வெளிவர உள்ளன. குறிப்பாக தனுஷ் மற்றும் சூர்யாவின் பிறந்தநாள் இம்மாதம் வருவதால், அவர்கள் நடித்த படங்களின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதுதவிர ரஜினிகாந்த் நடித்த கூலி, சிவகார்த்திகேயனின் மதராஸி போன்ற திரைப்படங்களின் அப்டேட்டுகளும் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன அப்டேட்ஸ் என்பதை பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் அப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 27ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாம்.
நடிகர் சிம்புவின் 49வது படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இது வட சென்னை யூனிவர்ஸில் உருவாகும் படமாகும். இப்படம் மூலம் சிம்புவும் வெற்றிமாறனும் முதன்முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக எஸ்.டிஆர் 49 படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்றும் ஜூலையில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம் மதராஸி. இப்படத்தில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மதராஸி திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இம்மாதம் தான் ரிலீஸ் ஆக உள்ளது. கடைசியாக டான் படத்தில் இணைந்து பணியாற்றிய அனிருத் - எஸ்.கே கூட்டணி சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் இணைந்து படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படம் கருப்பு. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர உள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் வருகிற ஜூலை 23ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கருப்பு பட டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் பிறந்தநாள் வருகிற ஜூலை 28ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் இட்லி கடை படத்தின் அப்டேட் வெளியாக வாய்ப்பு உள்ளது. அப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி அப்படத்தை இயக்கியும் உள்ளார் தனுஷ். இதுதவிர அவர் கைவசம் உள்ள விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தின் அப்டேட் மற்றும் இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அவர் நடித்துள்ள தேரே இஸ்க் மெய்ன் திரைப்படத்தின் அப்டேட்டும் வெளிவர வாய்ப்பு உள்ளது.