Dhanush : நயன்தாராவுக்கு 10 கோடி; சிம்புவுக்கு ஃப்ரீ - தனுஷின் NOC பரிதாபங்கள்!

Published : Jul 01, 2025, 09:47 AM IST

தடையில்லா சான்று வழங்க நடிகை நயன்தாராவிடம் 10 கோடி கேட்ட தனுஷ், தற்போது வட சென்னை கதைக்காக சிம்புவுக்கு இலவசமாகவே NOC வழங்கி உள்ளார்.

PREV
15
Dhanush NOC Approach Between Simbu and Nayanthara

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வரும் தனுஷ், பல திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில் இன்று முன்னணி இசையமைப்பாளராக உள்ள அனிருத், முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் உள்பட ஏராளமான திறமையாளர்களை அறிமுகப்படுத்தியவர் தனுஷ் தான். நடிகர் தனுஷ் தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அந்தப் பட்டியலில் உள்ள முக்கியமான படங்களில் நானும் ரெளடி தான் திரைப்படமும் ஒன்று.

25
தனுஷ் - நயன்தாரா மோதல்

விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தை தனுஷ் தான் தயாரித்து இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் நயன்தாராவும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு முன்னர் வரை நட்புடன் பழகி வந்த தனுஷ், நயன்தாரா, இப்படத்திற்கு பின்னர் எலியும் பூனையுமாக மாறினர். அதற்கு காரணம் அப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மனக்கசப்பு தான். கொடுத்த பட்ஜெட்டைவிட கூடுதலாக 10 கோடி வரை செலவிழுத்து வைத்ததாக நயன்தாரா மீது அதிருப்தியில் இருந்தார் தனுஷ். இந்த செலவினால் அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியும் தனுஷுக்கு பெரியளவில் லாபம் கிடைக்காமல் போய்விட்டது.

35
நயன்தாராவுக்கு அனுமதி மறுப்பு

இதனிடைய நடிகை நயன்தாரா, தன்னுடைய ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் பட பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கோரி இருந்தார். ஏனெனில் நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது தான் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை நயன்தாராவை மனதில் வைத்து தான் எழுதி இருந்தார் விக்னேஷ் சிவன். இதனால் அந்தப் பாடல்களை தனது ஆவணப்படத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறார் நயன். ஆனால் நடிகர் தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

45
நயனிடம் 10 கோடி கேட்ட தனுஷ்

இதையடுத்து, அந்த பாடல்கள் இன்றி ஆவணப்படத்தை வெளியிட முடிவெடுத்த நயன்தாரா, நானும் ரெளடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த 3 விநாடி வீடியோ காட்சியை அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருந்தார். இந்த வீடியோவை நீக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பிய தனுஷ், நீக்காவிட்டால் தனக்கு 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து நீதிமன்றத்தை நாடிய தனுஷ், நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

55
சிம்புவுக்கு இலவசமாக NOC வழங்கிய தனுஷ்

இப்படி நயன்தாராவிடம் 3 செகண்ட் வீடியோவுக்காக 10 கோடி கேட்ட தனுஷ், அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை கதைக்களத்தில் உருவாக உள்ள படத்திற்காக நடிகர் சிம்புவிடம் ஒரு ரூபா கூட வாங்காமல் அதற்கு தடையில்லா சான்று வழங்கி இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவை டேக் செய்து தனுஷ் குசும்புக்காரன் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். இதைப்பார்த்த ரசிகர்கள் நண்பர்களுக்காக தனுஷ் எதையும் செய்வார் எனக் கூறி வருகின்றனர். இந்த NOC விவகாரத்தில் தனுஷ், சிம்பு, நயன்தாராவை குறிப்பிட்டு நெட்டிசன்கள் போடும் மீம்ஸ் செம்ம வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories