Tabla Prasad demise: தமிழ், ஹிந்தி, தெலுங்கு என கிட்டத்தட்ட 5 மொழிகளில் ஏறக்குறைய 60,000 பாடல்களுக்கு இசையமைத்துள்ள தபேலா பிரசாத் சென்னையில் காலமானார்..
ரஜினியின் நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட தில்லு முல்லு, பில்லா படங்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். இவரின் இசை குரூப்பில் தபேலா வாசித்தவர் பிரசாத். அந்த படங்கள் ரீமேக்காக வெளியானபோது யுவன் இசையில் தபேலா வாசித்தவரும் இவர்தான்..
28
Tabla Prasad demise
R.D.பர்மன், சி.ராமசந்திரா, லஷ்மி காந்த் பியாரிலால், நவ்ஷாத், பப்பிலஹரி, கே.வி.எம், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா, ரஹ்மான், யுவன், கார்த்திக் ராஜா, ஜி.விபிரகாஷ் என 4 தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் பிரசாத் பணிபுரிந்துள்ளார்.
38
Tabla Prasad demise
கிட்டத்தட்ட 2500 படங்கள், 5க்கும் அதிகமான மொழிகளில் ஏறக்குறைய 60,000 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தபேலா பிரசாத்.
48
Tabla Prasad demise
இசை குடும்ப பின்னனியில் பிறந்த பிரசாத் 7 வயதில் தபாலே வாசிக்க தொடங்கி கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தாண்டி இசையுலகில் தபேலாவுடன் வலம் வந்தார்.
58
Tabla Prasad demise
சமீபத்தில் பேட்டி ஒன்றில் வருத்தம் தெரிவித்திருத்த பிரசாத். நவீன இசைக்கருவிகளின் பயன்பாடு அதிகமாகிவிட்டதால், பாரம்பரிய இசைக்கருவிகளின் பயன்பாடு குறைந்துவிட்டதாக கூறியிருந்தார்.
70 வயதை கடந்த தபேலா பிரசாத் வயது மூப்பின் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பிரசாத் சென்னையில் காலமானார்.
78
Tabla Prasad demise
தபேலாவில் பாடல்களையே இசைக்கும் வல்லமை பெற்றவர் பிரசாத். எலந்த பழம் பாடல், சிவாஜி கணேசனின் என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெருப்பு போன்ற பாடல்கள் தபேலாவில் வாசிப்பார்.
88
Tabla Prasad demise
சுமார் 68 ஆண்டுகளாக தபேலா வாசித்து வந்தபிரசாத் அவர்களின் மறைவிற்கு பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.