A R Rahman daughter Khatija engaged : ஏ.ஆர்.ரகுமான் மாப்பிள்ளை பற்றி வெளியான ஆச்சர்ய தகவல்!

Published : Jan 03, 2022, 11:23 AM ISTUpdated : Jan 03, 2022, 12:35 PM IST

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் (AR Rahman) மூத்த மகள் கதீஜாவுக்கு (Khatija) விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இவருடைய திருமண நிச்சயதார்த்தம் முடிந்த தகவலை நேற்று அதிகார பூர்வமாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கதீஜா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் மாப்பிள்ளை குறித்து வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.  

PREV
17
A R Rahman daughter Khatija engaged : ஏ.ஆர்.ரகுமான் மாப்பிள்ளை பற்றி வெளியான ஆச்சர்ய தகவல்!

திரையுலகில் புகழின் உச்சத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீட்டில் விரைவில் கெட்டி மேளம் கொட்ட உள்ள தகவல் நேற்று வெளியாக பலரும் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

 

27

இவருடைய திருமண நிச்சயதார்த்தம், கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி, கதீஜாவின் பிறந்தநாள் அன்றே அரங்கேறியுள்ளது. இதனை அவரே தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.

 

37

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், ரியாசுதீன் ஷேக் மொஹமத் என்பவருக்கும், தனக்கும்  கடந்த 29ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் இந்த நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தன்னுடை பிறந்தநாளில் இந்த விசேஷம் நடந்தது மிகவும் சந்தோஷம் என தெரிவித்திருந்தார்.

 

47

மேலும் தன்னுடைய வருங்கால கணவரின் புகைப்படத்தையும், தன்னுடைய புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இதற்க்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை மழை போல் பொழிந்து வந்தனர்.

 

57

இதை தொடர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் மகளை திருமணம் செய்யப்போகும் ரியாசுதீன் ஷேக் பற்றி பலரும் எதிர்பார்த்திடாத ஆச்சர்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

67

அதாவது இவர் ஒரு சவுண்ட் இன்ஜினியர் என்றும், இவர் பல பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார். குறிப்பாக தன்னுடைய வருங்கால மாமனாரான,  ஏஆர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளாராம்.

 

 

77

எனவே தன்னிடம் பணியாற்றிய ஒருவருக்கே ஏஆர் ரஹ்மான் தன்னுடைய மகளுக்கு மனம் முடிக்க முடிவு செய்துள்ளார் என்கிற ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.

 

Read more Photos on
click me!

Recommended Stories