சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை, வீரம், விஸ்வாசம் போன்ற கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த சிவா தான் இப்படத்தை இயக்கி வருகிறார். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.