அட்ராசக்க; அதிரடியாக ஆஸ்கர் ரேஸில் நுழைந்த சூர்யாவின் கங்குவா!

Published : Jan 07, 2025, 11:50 AM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து பிளாப் ஆன கங்குவா திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கி உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

PREV
14
அட்ராசக்க; அதிரடியாக ஆஸ்கர் ரேஸில் நுழைந்த சூர்யாவின் கங்குவா!
Kanguva Enters Oscar Race

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் கங்குவா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருந்தார். மேலும் கருணாஸ், நட்டி நட்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தார். கங்குவா திரைப்படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தார் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா.

24
kanguva

2024-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் கங்குவா திரைப்படமும் ஒன்று. இப்படம் முதலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆனதால் வேறுவழியின்றி கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றினர். பின்னர் கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி கங்குவா திரைப்படம் உலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... கங்குவாவின் 2ஆம் பாகம் குறித்து பேசிய நடிகர் நட்டி; இன்னும் யாருக்குமே புரியல!

34
Kanguva Suriya

மிகுந்த எதிர்பார்ப்புடன் இப்படத்தை காணச் சென்ற ரசிகர்களை காது வலியோடு வீட்டுக்கு அனுப்பியது கங்குவா. படத்தில் அதிகளவு ஒலி இருந்தது மட்டுமின்றி சொதப்பலான திரைக்கதையால் படம் புஷ்வானம் ஆனது. முதல் ஷோவிலேயே படத்தின் ரிசல்ட் தெரியவந்ததால் படத்தின் வசூலும் முதல் நாளில் இருந்தே அடிவாங்கியது. இப்படத்தை மீம் கிரியேட்டர்கள் கடுமையாக ட்ரோல் செய்தும் வந்தனர். படத்தின் ரிலீசுக்கு முன்னர் படக்குழு இப்படத்தை பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் செய்தது தான் இவ்வளவு ட்ரோல்களை கங்குவா சந்திக்க காரணமாக அமைந்தது.

44
Oscar contenders for 2025

தியேட்டரில் இருந்து ஒரே வாரத்தில் வாஷ் அவுட் ஆன கங்குவா திரைப்படம் 100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. கங்குவா படத்தின் தோல்வியால் கடும் அப்செட்டில் இருந்து வந்த நடிகர் சூர்யாவுக்கு தற்போது ஹாப்பி நியூஸ் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் தற்போது ஆஸ்கர் ரேஸில் இணைந்துள்ளது. சிறந்த படத்திற்கான பிரிவில் உலகெங்கிலும் இருந்து 323 படங்கள் போட்டியிடுகின்றன. அதில் கங்குவா திரைப்படமும் ஒன்று. இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த தகவலை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ஃபயர் விட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தியேட்டரில் டிசாஸ்டர்; ஓடிடியில் பிளாக்பஸ்டர்! கங்குவா புது சாதனை

Read more Photos on
click me!

Recommended Stories