
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறியப்படும், சாக்ஷி அகர்வால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர், சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் கால் பதித்தார். பின்னர் தன்னை ஒரு நடிகையாக நிலை நிறுத்திக் கொள்ள, திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார்.
அந்த வகையில், இயக்குனர் அட்லீ இயக்குனராக அறிமுகமான 'ராஜா ராணி' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் அடுத்தடுத்து நடிக்க துவங்கினார். அழகும் திறமையும் இருந்தும், தற்போது வரை முன்னணி இடத்தை பிடிக்க முடியாத சாக்ஷி அகர்வால், திரைப்பட வாய்ப்புக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
நயன்தாராவிடம் 5 கோடி கேட்கவே இல்லை... சந்திரமுகி படக்குழு விளக்கம்!
தன்னுடைய திறமையை நிரூபித்து, அடுத்தடுத்து அடுத்தடுத்த டாஸ்க்களை சிறப்பாக விளையாடி வந்த நிலையில், கவின் மீது சாக்ஷிக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, அவரின் விளையாட்டை பாதிக்கச் செய்தது. ஒரு கட்டத்தில் எப்போதும் அழுது கொண்டு, நான் வீட்டுக்கு போகிறேன்... வீட்டுக்கு போகிறேன்.. என சொல்லிக் கொண்டிருந்த நிலையில், மக்களும் நீங்க விளையாடியது போதும், வீட்டுக்கு கிளம்புங்க என சொல்வது போல், ஓட்டுக்களை குறைவாக போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கவின் ஆரம்பத்தில் சாக்ஷியை காதலிப்பது போல் நடந்து கொண்டாலும், பின்னர் லாஸ்லியாவை காதலித்ததால் தான் சாக்ஷி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். சாக்ஷி அகர்வால் அதிலிருந்து வெளியே வர சில மாதங்கள் எடுத்துக் கொண்ட நிலையில், பின்னர் மீண்டும் சமூக வலைதளத்தில் தன்னுடைய ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள துவங்கினார். அதேபோல் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய பின்னர், அஜித் நடித்த விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, 4 ஸ்டோரி ,நான் கடவுள் இல்லை, பகீரா போன்ற படங்களில் நடித்தார்.அந்த வரிசையில் தற்போது இவரின் கைவசம் கெஸ்ட்: சாப்டர் 2 மற்றும் தி நைட் ஆகிய படங்கள் உள்ளன.
பாலாவால் வந்த வினை; தீய பழக்கங்கள் - விஷால் நிலைமைக்கு காரணம் இதுதான்? பகீர் கிளப்பிய பிரபலம்!
34 வயதை எட்டிய பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த சாக்ஷி அகர்வால் கடந்த ஜனவரி 4ஆம் தேதி தன்னுடைய சிறு வயது நண்பர், நவ்நீத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்துடன் அறிவித்தார். பிரம்மாண்டமாக நடந்த இவருடைய திருமணம், சொந்த ஊரான உத்தரகாண்டில் நடந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் இவருக்கு நடந்த வரவேற்பு நிகழ்சியில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். எப்போதும் விதவிதமாக க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால், தற்போது திருமணமான கையோடு தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.