Oh My Dog : பீஸ்ட் ரிலீசான மறுவாரமே அதிரடியாக களமிறங்கும் சூர்யா படம்... திடீர் அறிவிப்பால் ஷாக்கான ரசிகர்கள்

Published : Apr 06, 2022, 01:15 PM IST

Oh My Dog : நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

PREV
15
Oh My Dog : பீஸ்ட் ரிலீசான மறுவாரமே அதிரடியாக களமிறங்கும் சூர்யா படம்... திடீர் அறிவிப்பால் ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி எண்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன்மூலம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

25

இதுவரை இந்நிறுவனம் தயாரிப்பில் வெளியான 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம், உரியடி 2, பொன்மகள் வந்தாள், ராட்சசி, சூரரைப் போற்று போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிறுவனம் கடந்தாண்டு அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றை போட்டிருந்தது. 

35

அதன்படி தான் தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இரவணே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’, ‘ஜெய் பீம்’, ‘ஓ மை டாக்’ ஆகிய 4 படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிடுவதாக அந்த ஒப்பந்தத்தின் மூலம் அறிவித்திருந்தனர். அதன்படி மேற்கண்ட 4 படங்களில் 3 படங்கள் திட்டமிட்டபடி அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் செய்யப்பட்டன.

45

ஆனால் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஓ மை டாக் திரைப்படம் மட்டும் திட்டமிட்டபடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசாக வில்லை. இப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தாமதம் ஆனதன் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

55

அதன்படி வருகிற ஏப்ரல் 21-ந் தேதி இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார். இதில் விஜயகுமார், வினய், மகிமா நம்பியார், அருண் விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை முதலில் ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். அந்த சமயத்தில் விஜய்யின் பீஸ்ட் ரிலீசாவதால், ஒரு வாரம் தாமதமாக இப்படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ShahRukh khan : பீஸ்ட் டிரைலர் பார்த்து மெர்சலான ஷாருக்கான்... ஒரே டுவிட்டில் முடிவுக்கு வந்த சர்ச்சை

Read more Photos on
click me!

Recommended Stories