விஜய்யின் பிகில் படத்துக்கு பின்னர் இயக்குனர் அட்லீக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஷாருக்கான் படம். இந்தியில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன்மூலம் அவர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மேலும் பிரியாமணி, யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்தாண்டு ஷாருக்கான் மகன் போதை வழக்கில் சிக்கியபோது இதன் ஷூட்டிங்கும் தடைபட்டது. மகனை எப்படியாவது வழக்கில் இருந்து மீட்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்த ஷாருக்கான் இப்படத்தை கிடப்பில் போட்டார். இதையடுத்து இப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாததால், இப்படம் கைவிடப்பட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவத் தொடங்கின.
ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு டுவிட் ஒன்றை போட்டுள்ளார் ஷாருக்கான். அதில் அவர் கூறியிருப்பதாவது: “அட்லீயைப் போலவே நானும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன். பீஸ்ட் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். டிரைலர் பவர்புல்லாக இருக்கிறது” என ஷாருக்கான் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த டுவிட்டுக்கு நன்றி சொல்லி இயக்குனர் அட்லீ போட்டுள்ள டுவிட்டில், “என்னோட அண்ணன், என்னோட தளபதி, விஜய் அண்ணாவின் பீஸ்ட் ஏப்ரல் 13-ல் வருகிறது. உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கு நன்றி ஷாருக்கான் சார். உங்களின் அன்புக்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அட்லீ - ஷாருக்கான் படம் கைவிடப்படவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... Thalapathy 66 : விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா... பூஜையுடன் தொடங்கியது தளபதி 66 - வைரலாகும் போட்டோஸ்