முதல் தேசிய விருது... தாய், தந்தையின் கழுத்தில் மாட்டி அழகுபார்த்த சூர்யா - வைரலாகும் போட்டோஸ்

First Published Oct 1, 2022, 2:27 PM IST

Suriya : நடிகர் சூர்யா தனது தேசிய விருதை தனது தந்தை சிவகுமாருக்கும், தாய் லட்சுமிக்கும் மாட்டிவிட்டு அழகு பார்த்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் சுதா கொங்கரா. இப்படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் ஆனது.

வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் இப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டன. நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு குடியரசுத் தலைவர் கையால் தேசிய விருதை பெற்றுக்கொண்டார் சூர்யா.

இதையும் படியுங்கள்... ஜோவின் முடிவு எப்பவுமே ஜோராக இருக்கும்... காதல் மனைவி குறித்து சூர்யா நெகிழ்ச்சி

நடிகர் சூர்யா பெறும் முதல் தேசிய விருது இதுவாகும். இவ்விழாவுக்கு பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்து விருதை பெற்றுக்கொண்டார் சூர்யா. அதேபோல் சிறந்த படத்திற்கான விருதை இப்படத்தை தயாரித்த 2டி நிறுவனம் சார்பில் நடிகை ஜோதிகா பெற்றுக்கொண்டார். இதனால் சூர்யாவின் குடும்பத்தினரே மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில், சூர்யா தனது தேசிய விருதை தனது தந்தை சிவகுமாருக்கும், தாய் லட்சுமிக்கும் மாட்டிவிட்டு அழகு பார்த்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், சுதாவுக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த விருது என் அன்பான ரசிகர்களுக்கு என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... தேசிய விருதுடன் கியூட் போஸ் கொடுத்த தியா - தேவ்... சூர்யா பேமிலியின் ஹாப்பி கிளிக்ஸ் இதோ

click me!