தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக பொன்னியின் செல்வன் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்படத்தை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஜாம்பவான் இயக்குனர்கள் எடுக்க முயன்றனர். அவையெல்லாம் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது மணிரத்னம் தனது விடாமுயற்சியால் வெற்றிகரமாக அப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.
சுமார் 800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் மணிரத்னம். அதன்படி இப்படத்தின் முதல்பாகம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இது தமிழ் சினிமாவின் பெருமைமிக்க படைப்பாக கருதப்படுவதனால் இப்படத்துடன் பிற நடிகர்களின் படங்கள் மோதலை தவிர்த்து வந்த நிலையில், தனுஷின் நானே வருவேன் படம் மட்டும் அப்படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தனர்.