ஜோவின் முடிவு எப்பவுமே ஜோராக இருக்கும்... காதல் மனைவி குறித்து சூர்யா நெகிழ்ச்சி

First Published | Oct 1, 2022, 10:03 AM IST

ஒரேமேடையில் தேசிய விருது வாங்கிய சூர்யா - ஜோதிகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இந்த தருணம் குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு தடைகளை கடந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் தொடங்கிய சூர்யாவின் திரையுலக பயணம் தற்போது தேசிய விருது வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா பெற்றார்.

அதுமட்டுமின்றி இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும் வழங்கப்பட்டு இருந்தது. அவ்விருதை இப்படத்தை தயாரித்த 2டி நிறுவனம் சார்பில் நடிகை ஜோதிகா பெற்றுக்கொண்டார். ஒரேமேடையில் தேசிய விருது வாங்கிய சூர்யா - ஜோதிகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இந்த தருணம் குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... பெங்களூருக்கு தப்பமுயன்ற TTF வாசன்... கொத்தாக மடக்கி கைது செய்த போலீஸ்

Tap to resize

சூர்யா பேசியதாவது : “எப்பவுமே என் மனைவியோட முடிவு சரியாகவே இருக்கும். எப்போ நான் குழப்பமடைந்து இருந்தாலும், ஒரு ஸ்கிரிப்ட்டை பார்த்த உடனே, அது சரியா இருக்குமா இல்லையா என்பதை ஜோ சொல்லிருக்காங்க. இது பலமுறை நடந்திருக்கு. காக்க காக்க, பேரழகன் என பல படங்கள் அவ்வாறு நடந்திருக்கின்றன. சூரரைப் போற்று படமும் அவ்வாறு நடந்தது தான்.

கதையை கேட்டவுடன், இதை கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லி, அந்த கதைக்குள் நான் செல்வதற்கு முன் ஜோவோட மனசும் இதுல இருந்துச்சு. அவுங்க மேடையில் தேசிய விருதை வாங்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னுடைய நலவிரும்பிகளுக்கும், என்னுடைய அன்பான ரசிகர்களுக்கும் நன்றி. இந்த விருது என்னுடைய ரசிகர்களுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சமர்பிப்பதாக” சூர்யா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... தேசிய விருதுடன் கியூட் போஸ் கொடுத்த தியா - தேவ்... சூர்யா பேமிலியின் ஹாப்பி கிளிக்ஸ் இதோ

Latest Videos

click me!