நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். அங்குள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்திய போது அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
சிவாஜி கணேசனின் குடும்பத்தினரும் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர். கடந்த 2006-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில், சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனின் உருவச்சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையூறாக இருந்ததன் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அந்த சிலை மெரினாவில் இருந்து அகற்றப்பட்டது.
இதையும் படியுங்கள்... ஜோவின் முடிவு எப்பவுமே ஜோராக இருக்கும்... காதல் மனைவி குறித்து சூர்யா நெகிழ்ச்சி
பின்னர் அந்த சிலையை அடையாறில் மணிமண்டபம் கட்டப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. தற்போதைய திமுக அரசு, மணிமண்டபத்தின் உள்ளே இருந்த சிவாஜியின் சிலையை வெளியே நிறுவி உள்ளனர். இன்று சிவாஜியின் பிறந்தநாளை ஒட்டி அந்த சிலை திறக்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் சேகர் பாபு, துரைமுருகன், மா.சுப்ரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர். அதேபோல் சிவாஜியின் மகன் பிரபு, பேரன் விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... பெங்களூருக்கு தப்பமுயன்ற TTF வாசன்... கொத்தாக மடக்கி கைது செய்த போலீஸ்