Suriya, Vetrimaaran
தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே அமோக வெற்றியை பெற்றுள்ளன. அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரியளவில் சோபிக்கவில்லை. விடுதலை 2 படத்திற்கு பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் வாடிவாசல்.
Vaadivaasal Update
வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இது சி.சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து உருவாக உள்ளது. ஜல்லிக்கட்டு சம்பந்தமான படம் என்பதால் இப்படத்திற்காக ஜல்லிக்கட்டு காளையை அடக்குவதற்கான பயிற்சியையும் எடுத்து வருகிறார் நடிகர் சூர்யா. இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த 2020ம் ஆண்டே வந்தாலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்... ஒருவழியாக ரிலீஸ் ஆன விடுதலை 2; வெற்றிமாறனின் அடுத்த படம் யாரோடு தெரியுமா?
Vaadivaasal Suriya
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தின் தோல்வியால் துவண்டு இருக்கும் நிலையில், அவருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக வாடிவாசல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கிவிடும். தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் பேட்டைக்காரன் படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தை முடித்த கையோடு வாடிவாசல் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
Vaadivaasal Heroine Aishwarya Lekshmi
அதன்படி வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து விஷ்ணு விஷால் ஜோடியாக கட்டா குஸ்தி, தனுஷுடன் ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது வாடிவாசல் மூலம் நடிகர் சூர்யாவுடன் முதன்முறையாக ஜோடி சேர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சூர்யாவின் முக்கியமான படம்.. ட்ராப் என்ற பேச்சுக்கே இடமில்லை - தயாரிப்பாளர் கொடுத்த ஸ்வீட் நியூஸ்!