suriya launches team jersey of arya cycle challenge
பிரபல நடிகர் ஆர்யா உடற்பயிற்சி செய்வதிலும் சைக்கிள் ஓட்டுவதிலும் அலாதி அன்பு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அவர் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல சைக்கிள் பந்தயங்களிலும் ஈடுபட்டுள்ளார். உலகில் மிகப்பெரிய சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுகளில் ஒன்றான லண்டன் LEL சைக்கிள் சவாலுக்கு தற்போது தயாராகி வருகிறார்.
24
suriya launches team jersey of arya cycle challenge
கடந்த இரண்டு மாதங்களிலும் ஆர்யா இந்த நிகழ்வில் கவனம் செலுத்தி மிகுந்த ஆர்வத்துடன் தயாராக வருகிறார். அவர் தனது பயிற்சியின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் வாழ்த்துக்களை பெற்று வந்தார். நிகழ்வு தேதி கிட்டத்தட்ட வந்து விட்டது போல் தெரிகிறது. சில அறிக்கையின்படி எல் இ எல் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரியும் கூறப்படுகிறது.
suriya launches team jersey of arya cycle challenge
சைக்கிள் சாவல் நெருங்குவதை அடுத்து அணிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்யா. பிரபல நடிகர் சூர்யா இந்த ஜெர்சிகளை வெளியிட்டுள்ளார். இதையடுத்து சூர்யா, ஆர்யா, ரைட்டர்ஸ் குழு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகர். இதில் சூர்யா வெளியிடும் ஜெர்சியில் ஆர்யா தற்போது நடித்து முடித்துள்ள கேப்டன் படத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளது.
suriya launches team jersey of arya cycle challenge
ஆர்யா மற்றும் அவரது சைக்கிள் ஓட்ட குழுவினருக்கு பெரிய ஆதரவாளராக சூர்யா இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர் குழு உடன் சைக்கிள் ஓட்டினார். ஜெர்சி வெளியீடு குறித்து பதிவிட்டுள்ள ஆர்யா, எங்கள் அணிக்கு நீங்கள் கொடுக்கும் ஊக்கம், அன்பு மற்றும் ஆதரவுக்கு மிக்க நன்றி சூர்யா. ரைடர்ஸ் அணி எப்போதும் போல் என எழுதியிருந்தார்.