சூர்யா - ஜோதிகா வீட்டில் விசேஷம்... குவியும் வாழ்த்து மழையால் திக்குமுக்காடிப் போன நட்சத்திர ஜோடி

First Published | Sep 11, 2022, 12:09 PM IST

சூர்யா - ஜோதிகா ஜோடி தங்களது 16-வது திருமண நாளை இன்று கொண்டாடி வருவதால் அவர்களுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக காலடி எடுத்து வைத்தார். இவர் முதன்முதலில் ஜோதிகாவை சந்தித்தது பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் தான். வஸந்த் இயக்கிய அப்படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த படத்தின் மூலம் இவர்களுக்கு இடையே நல்ல நட்பும் உருவானது.

இந்த நட்பின் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் காக்க காக்க திரைப்படம். இப்படத்திற்காக முதலில் ஜோதிகாவை கமிட் செய்த கவுதம் மேனன், யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என தேடி வந்தபோது, சூர்யாவை பரிந்துரை செய்துள்ளார் ஜோதிகா. இதன்மூலம் தான் சூர்யாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் அவர்களது கெரியர் மட்டுமின்றி வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்தது.

Tap to resize

இப்படத்தில் நடித்தபோது தான் சூர்யா - ஜோதிகா இடையே காதல் மலர்ந்தது. இப்படத்தை போல் காதலும் சக்சஸ் ஆனதால் செம்ம குஷியில் இருந்தார் சூர்யா. ஆனால் இவர்களது காதலுக்கு சூர்யாவின் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சில ஆண்டுகளாக திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த அந்த ஜோடி இறுதியாக 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி திருமணம் செய்துகொண்டது. இந்த ஜோடிக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

இதையும் படியுங்கள்... சூர்யா இல்லை... ‘வேள்பாரி’க்காக வேறு மாநில நடிகரை ஒப்பந்தம் செய்த ஷங்கர் - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

இந்நிலையில், இன்று சூர்யா - ஜோதிகா ஜோடி தங்களது 16-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். திருமணமாகி 16 ஆண்டுகள் ஆனாலும், அன்றைப் போல் இன்றும் குறையாத காதலுடன் வாழ்ந்து வரும் சூர்யா - ஜோதிகாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. பிரபலங்களும் அதன் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சூர்யா - ஜோதிகாவின் திருமண நாளை ஒட்டி ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த சூர்யா ரசிகர்கள் அங்குள்ள முதியோர் இல்லத்தில் அங்கு வசிக்கும் ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு வழங்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... கோலாகலமாக நடந்த ‘பரிதாபங்கள்’ கோபி-யின் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ

Latest Videos

click me!