அடித்து தும்சம் செய்த சூர்யா! கையில் வாளுடன் ரத்தம் வழிய ரணகளமாக வெளியான 'எதற்கும் துணிந்தவன்' செகண்ட் லுக்!

Published : Jul 23, 2021, 11:43 AM IST

நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை 6 மணிக்கு வெளியான நிலையில், இந்த படத்தின் செகண்ட் லுக் நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த செகண்ட் லுக் போஸ்டரையும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.  

PREV
18
அடித்து தும்சம் செய்த சூர்யா! கையில் வாளுடன் ரத்தம் வழிய ரணகளமாக வெளியான 'எதற்கும் துணிந்தவன்' செகண்ட் லுக்!
suriya

நடிகர் சூர்யா ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்யாமல், வித்தியாசமாகவும்... ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றாப்போல் தன்னுடைய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'சூரரை போற்று' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

28

soorarai pottru

இந்த படத்தில் மாறன் கதாபாத்திரமாகவே சூர்யா வாழ்ந்து நடித்திருந்தார் என, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கூறினர். மேலும் ஆஸ்கார் விருது பட்டியலில் 100 படங்களில் ஒன்றாக இப்படமும் தேர்வு செய்யப்பட்டது மட்டும் இன்றி, IMBD ரேட்டிங்கில் உலக அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தது.

38

Soorarai Pottru

தற்போது 'சூரரை போற்று' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த தகவலை பட குழு உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

48

suriya

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா பிரச்சனை கட்டுக்குள் வந்துவிட்டதால், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

58

etharkkum thuninthavan

ஜனரங்கமான குடும்ப கதைகளை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து தற்போது 'எதற்கும் துணிந்தவன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

68

etharkkum thuninthavan

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்கவிட்டிருந்தார் சூர்யா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து இரண்டாவது லுக்கையும் படக்குழு நேற்று இரவு வெளியிட்டுள்ளது.

78
suriya

நள்ளிரவு 12 மணிக்கு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த செகண்ட் லுக்கில்... பலரை அடித்து தும்சம் செய்து, மிரட்டலாக கையில் வால் பிடித்து... ரத்தம் வழிய சூர்யா அமர்ந்திருந்தார். 

88

etharkkum thuninthavan

ஃபர்ஸ்ட் லுக் வெளியான உச்சகத்தில் இருந்த ரசிகர்களை, செகண்ட் லுக் போஸ்டர் மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது இரண்டு போஸ்டரையும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு , சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories