Published : Mar 16, 2026, 07:56 PM ISTUpdated : Mar 16, 2026, 07:58 PM IST
Vishwanathan and Sons Movie Teaser Review in Tamil : விஜய் டிவியின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் சீரியலில் 20 வயது வித்தியாசமான காதல் கதை சூடுபிடித்துள்ளது. விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் எப்படி இருக்கு? முழு அலசல்!
Vishwanathan and Sons Movie Teaser Review in Tamil : வயது வித்தியாசம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த ஒரு எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ள படம் தான் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமீதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ளது. சூர்யாவின் 46ஆவது படம். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் நாக வம்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில், சூர்யாவை துரத்தி துரத்தி காதலிக்கும் 20 வயது வித்தியாசம் கொண்ட காதலியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
24
Vishwanathan and Sons movie cast and crew
ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தான் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் சஸ்பென்ஸாக வெளியாகியுள்ளது. டீசரில் சூர்யா துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பல பதக்கங்களை வெல்கிறார். அதன் பிறகு அவருக்கு வயதாகும் போது அவரது கண் பார்வையில் ஏதோ கோளாறு ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றாரா இல்லையா? சூர்யாவை துரத்தி துரத்தி காதலிக்கும் மமிதா பைஜூவின் காதல் கை கூடியதா இல்லையா என்பது தான் படத்தின் கதை.
34
Vishwanathan and Sons Movie Teaser
தன்னை விட 20 வயது மூத்தவரான சூர்யாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால், சூர்யாவிற்கு அப்படியொரு எண்ணம் வரவே இல்லை. இருந்தாலும் சூர்யாவின் வீட்டில் தான் அவர் இருக்கிறார். இதே போன்று மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. சூர்யாவின் கையில் இருக்கும் குழந்தை சூர்யாவின் மகன் இல்லை சூர்யாவின் தம்பி என்று சொல்லப்படுகிறது.
குழந்தைதான் இந்த படத்தின் மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என டைட்டில் இருக்கும் நிலையில், தொழிலதிபர் விஸ்வநாத்தின் மூத்த மகன் தான் சூர்யா என்றும் இளைய மகன் தான் அந்த குழந்தை என்றும் இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள், சவால் நிறைந்து காணப்படும் சுவாரஸ்யம் தான் இந்த கதை என்று சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.