Rio Raj Reveals Kavin Breaking Thalaivaa Pirated CD: ரியோ ராஜ் பேசும்போது, விஜய் நடித்த 'தலைவா' பட தமிழ்நாட்டில் ரிலீஸ் தள்ளிப்போன போது, கவின் அந்தப் படத்தின் திருட்டு சிடிக்களைக் கண்டதும் ஆவேசமடைந்து அவற்றை உடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கவின் மற்றும் நடிகர் ரியோ ராஜ் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்மூலம் பிரபலமானவர்கள்.இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளை கடந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். நடிகர் கவின்: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் கவின்.கல்லூரி சாலை கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி என இவர் நடித்த சின்னத்திரைத் தொடர்கள் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. .
27
Kavin breaking Thalaivaa movie pirated CD
வேட்டையன்: சரவணன் மீனாட்சி தொடரில் வில்லனாக வரும் கவின் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த வேட்டையன் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது சரவணன் மீனாட்சி சீரியலின் ரசிகர்களின் வேட்டையன் கதாபாத்திரம் தான் மிகவும் பரவலாக பேசப்பட்டது. அந்த அளவிற்கு ஆண் அழகனாகவும் துடிப்பான பேச்சும் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இந்த சீரியலில் வரும் மைனா கேரக்டர் நந்தினி வேட்டையனை வேட்டையா வேட்டையா என்று மிக அழகாகவும் கூப்பிடுவார் அதிலிருந்து இவர் மிகவும் பிரபலம் அடைந்தார். உதவி இயக்குனர்: அதன்பிறகு இவரது அடுத்த களம் வெள்ளித்திரையாகத் தான் இருந்தது. இவர் நடிகராவதற்கு முன்பு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்
37
Rio about Kavin's love for cinema
பிக் பாஸ்: அதன் பிறகு பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக மாறினார். இலங்கைப் பெண்ணான லாஸ்லியாண பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக வந்தார் அவரை ஒருதலையாக முதலில் காதலித்தார் அதன் பிறகு கவின் அழகிலும் பேச்சு திறமையிலும் லாஸ்லியா கவின் வலையில் விழுந்தார். 86 நாள் கழித்தும் கவின் லாஸ்லயா என இருவரும் அந்த வீட்டிற்குள் காதலித்து வந்தனர். இது தமிழக மக்களுக்கு இடையே மிகவும் பெருத்த வரவேற்பு பெற்று வந்தது.
47
Kavin as a Thalapathy Vijay fan
பிக் பாஸ் வீட்டுக்குள் பிக்ஸ் வாஸ் போட்டியாளர்களின் பெற்றோர்கள் வரும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது அப்பொழுது லாஸ்லியாவின் அப்பா அம்மா மற்றும் தங்கைகள் வந்தனர் அப்பொழுது லாஸ்லியாவின் அப்பா இதெல்லாம் வேண்டாம் உடன் இதை தூக்கி போடு உள்ளே வா என்று சொன்னார் அதன்படி தனது காதலையும் தூக்கி போட்டார் லாஸ்லியா. பிறகு லாஸ்லியாவிடமிருந்து விலகினார் கவின். அந்த வீட்டை விட்டும் சென்றார்.
57
சினிமாவில் வாய்ப்பு:
வெள்ளித்திரைக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்த காலத்தில் தான் பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தில் மருத்துவராகவும், நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.கவினின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக அமைந்தது தான் லிஃப்ட் திரைப்படம். இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கவின், அடுத்ததாக டாடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இளம் நடிகர்கள் பட்டியலில் இணைந்தார். நடப்பாண்டு இவரது நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் ஓரளவு வெற்றிப் படமாகவே அமைந்தது.
67
சினிமா மீது இருக்கும் லவ்:
நடிகர் கவினுக்குக்கு சினிமா என்றால் அவ்வளவு பிடிக்குமாம் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் போது தவறாமல் அந்த கதையை பார்த்து விடுவாராம் அதன் மூலம் நாம் ஒரு திரைக்கதையை எப்படி தேர்ந்தெடுப்பது இப்படி நடிப்பது என்று ஒவ்வொரு படத்தையும் பார்த்து கற்றுக் கொள்வாராம். அவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு உயர்ந்துள்ளார் அதற்கு காரணம் அவரது கடின உழைப்பும் அவர் உள்ளத்தின் மீது இருக்கும் காதலும் சினிமா மீது இருக்கும் காதலும் தான் காரணம் என்று ரியோ கூறியுள்ளார்.
77
ரியோராஜ்
தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா திரைப்படம் தமிழ்நாட்டு மட்டும் ரிலீஸ் ஆகவில்லை மற்ற மாநிலங்களில் ரிலீஸ் ஆகியது. ஆனா எங்களுக்கு மற்ற மாநிலங்களில் இருக்கும் நண்பரின் மூலம் அந்த படத்தின் திருட்டு விசிடி கிடைத்தது. நாங்க எல்லாம் சேர்ந்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தபோது கவின் எனக்கு இந்த திருட்டு விசிடி எல்லாம் பிடிக்காது. பார்த்தா தியேட்டர்ல போய் தான் பாக்கணும் என்று அந்த திருட்டு விசடியை உடைத்து போட்டார் கவின். அந்த அளவிற்கு சினிமா மீது அவருக்கு மரியாதையும் காதலும் இருக்கின்றது என்று கவினியை பற்றி பெருமையாக பேசியுள்ளார் ரியோராஜ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.