Senthil Plan to 10 Lakhs Bribe in His Office : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாமனார் லஞ்சம் வாங்க ஐடியா கொடுத்த நிலையில் அப்பாவிடம் வாங்கிய ரூ.10 லட்சத்தை திரும்ப கொடுக்க செந்தில் லஞ்சம் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Senthil Plan to 10 Lakhs Bribe in His Office : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது இந்த வாரம் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. கதிர் மற்றும் ராஜீயின் திருமணத்தை ரகசியமாக நடத்தி வைத்தது கோமதி தான் என்று தெரிந்து பாண்டியன் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். கிட்டத்தட்ட ஒரு மாத்ததிற்கும் மேலாக பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் பேசிக் கொள்வதில்லை.
25
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மீனா அப்பா
கோமதி எத்தனையோ பிளான் போட்டாலும் ஒர்க் அவுட்டாகவில்லை. வேறு வழியில்லாமல் மீனாவின் ஐடியாவை இப்போது பாலோ செய்கிறார். இது ஒரு புறம் இருந்தாலும் சக்திவேல் வீட்டை விட்டு துரத்திவிட எதிர்த்த வீடான தனது மகள் வீட்டிற்கு வந்து விட்டார் காந்திமதி. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டது முதல் முத்துவேல் மற்றும் சக்திவேல் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த காந்திமதி முதல் முறையாக இப்போது மகள் கோமதியின் வீட்டில் தனது பேரன், பேத்திகளுடன் இருக்கிறார். எப்போது ஒற்றுமையாக இருந்த மகள் மற்றும் மருமகன் இருவரும் இப்போது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. இதனால் மன வேதனை அடைந்த காந்திமதி அவர்களை ஒன்று சேர்த்து வைக்க போட்ட திட்டத்தில் செந்தில் மற்றும் கதிர் இருவரும் சிக்கிக்கொண்டனர்.
35
பாண்டியன் போட்ட ரூல்ஸ்
ஆம், பாண்டியனை எதிர்த்து பேச ஆரம்பித்த நிலையில், அவரோ உங்கள் இருவருக்கும் நான் கொடுத்த ரூ.10 லட்சம் பணத்தை 2 மாசத்திற்குள்ளாக தர வேண்டும் என்று கெடு விதித்தார். இதைக் கேட்டு செந்தில் மற்றும் கதிர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். செந்தில் எப்படியும் அப்பா விதித்த 2 மாசத்திற்குள்ளாக அந்த பணத்தை திருப்பி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி திருப்பி கொடுப்பார் என்றால், செந்தில் இப்போது லஞ்சம் வாங்க தொடங்கிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக அல்லது மொத்தமாகவோ லஞ்சம் வாங்கி அந்த பணத்தை தனது அப்பாவிடம் திருப்பி கொடுக்கலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே சொந்தமாக வீடு, கார் என்று வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதற்கு லஞ்சம் வாங்க வேண்டும். அதனை லஞ்சம் என்று சொல்லக் கூடாது அன்பளிப்பு என்று சொல்லி தனது மருமகனுக்கு மீனாவின் அப்பா ஐடியா கொடுத்தார். ஒரு முறை அல்ல பல முறை இந்த ஐடியாவை சொல்லிக் கொண்டே இருந்தார்.
55
10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குவாரா செந்தில்?
ஆரம்பத்தில் அவரது ஐடியாவை கேட்க மறுத்த செந்தில், இப்போது அவரது ஐடியாவை வேத வாக்காக கொண்டுள்ளார். மேலும், மாமனாருக்கு தெரிந்த ஒருவருக்கு அவரது வேலையை முடித்து கொடுப்பதற்கு லஞ்சம் பெற்றுள்ளார். இதே போன்று இனி வரும் நாட்களிலும் லஞ்சம் பெற்று தன் அப்பாவிடம் வாங்கிய ரூ.10 லட்சம் பணத்தை திரும்ப கொடுப்பார் என்று தெரிகிறது. என்ன நடக்கிறது என்று இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.