கனிகா அவுட்! எதிர்நீச்சல் 2 சீரியலில் இனி ஈஸ்வரியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

Published : Mar 16, 2026, 02:56 PM IST

சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இருந்து கனிகா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிக்க உள்ள நடிகை பற்றிய அப்டேட் கசிந்துள்ளது.

PREV
14
New Eswari in Ethirneechal Thodargiradhu Serial

சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கத்தில் சக்கைப்போடு போட்டு வந்த இந்த சீரியல், டிஆர்பியிலும் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. ஆனால் தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 2024-ம் ஆண்டு இறுதியில் எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் அதே நடிகர், நடிகைகளோடு, மாற்றியமைக்கப்பட்ட கதைக்களத்துடன் அந்த சீரியல் மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த சீரியல் தொடங்கி 1 ஆண்டுக்கு மேலாக வெற்றிநடைபோட்டு வருகிறது.

24
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

எதிர்நீச்சல் சீரியலின் கதைச்சுருக்கம் என்னவென்றால், நான்கு வெவ்வேறு கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து பணக்கார குடும்பத்தில் வாக்கப்படும் பெண்கள், தங்கள் சுயமரியாதையை இழந்து அடிமை வாழ்க்கை வாழ்ந்து வர, அவர்கள் அந்த ஆண் ஆதிக்கம் மிக்க சூழலில் இருந்து எப்படி தன்னெழுச்சி பெறுகிறார்கள் என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த சீரியல் தற்போது சன் டிவியில், வாரத்தின் 7 நாட்களும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கென தனி ரசிகர்பாட்டாளமே உள்ளது.

34
கனிகா விலகல்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடிகை கனிகாவும் நடித்து வந்தார். அவர் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் ஆதி குணசேகரனின் மனைவியாக நடித்து வந்தார். கடந்த ஆண்டு ஆதி குணசேகரன் பலமாக தாக்கியதில் தலையில் அடிபட்ட ஈஸ்வரி கோமா நிலைக்கு சென்றது போல் காட்டி இருந்தார்கள். அந்த எபிசோடுக்கு பின் நடிகை கனிகா ஆஸ்பத்திரியில் இருக்கும்படியான காட்சிகள் தான் அதிகளவில் இடம்பெற்று வந்தன. அவருக்கு ஒரு டயலாக் கூட இல்லாமல், படுத்த படுக்கையிலேயே சுமார் 7 மாதங்களுக்கு மேலாக காட்டி வருகிறார்கள்.

44
கனிகாவுக்கு பதில் இவரா?

இதனிடையே நடிகை கனிகா, தான் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகியதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தினார். இதனால் இனி ஈஸ்வரியாக நடிக்கபோகும் நடிகை யார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. சில நடிகை தேவையாணி அந்த ரோலில் நடிக்க இருப்பதாக கூறி வந்தனர். ஆனால் தற்போது அந்த நடிகை யார் என்கிற சஸ்பென்ஸ் உடைந்துள்ளது. அதன்படி, நடிகை கனிகாவுக்கு பதிலாக, ஈஸ்வரி கதாபாத்திரத்தில் ஸ்ரீஜா நடிக்க உள்ளாராம். இவர் பொம்மலாட்டம் என்கிற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார். இவர் ஈஸ்வரி கதாபாத்திரத்திற்கு செட் ஆவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories