K Bhagyaraj Pandiarajan Relationship Guru Shisya Father and Son Bonding : தமிழ் சினிமாவில் குரு - சீடர் உறவுக்கு இலக்கணமாகத் திகழும் பாக்யராஜ் மற்றும் பாண்டியராஜனின் உணர்ச்சிகரமான தந்தை-மகன் போன்ற நெருக்கமான உறவு குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு
பிரபல தமிழ் பட இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜன் இசைக் கல்லூரியில் வயலின் பயின்ற பிறகு, கதை, வசனகர்த்தா தூயவனின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். அந்த சமயத்தில் கே.பாக்யராஜைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பாக்யராஜின் திறமை மற்றும் பாணியால் ஈர்க்கப்பட்டு அவரிடம் பணிபுரிய வேண்டும் என்று ஆர்வம் கொண்ட பாண்டியராஜன் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர விரும்புகிறார்.
அதன் பிறகு பாக்கியராஜ் இடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டார் அவர் உடன் ஒவ்வொரு படத்திலும் உதவியாளராக கூடவே பணியாற்றி வந்தார்.பாக்யராஜிடம் பணிபுரிந்த காலத்தில் திரைக்கதை, வசனம் மற்றும் நகைச்சுவை கலந்து கதையைச் சொல்லும் பாணி போன்றவற்றை பாண்டியராஜன் கற்றுக்கொண்டார்.பாண்டியராஜன் தனது தனித்துவமான நகைச்சுவை பாணிக்கு பாக்யராஜின் ஆளுமை ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனராகவும், அதிலும் சிறந்த நடிகராகவும் கடந்த 1981ம் ஆண்டு முதல் பயணித்து வருபவர் தான் பாண்டியராஜன். திரை உலகில் பல முக்கிய இயக்குனர்களை அறிமுகம் செய்த பெருமைக்கு உரியவர் தான் பாக்யராஜ். அந்த வகையில் அவரிடம் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி, அதன் பிறகு இயக்குனராகம், நடிகராகவும் தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் தான் பாண்டியராஜன். கடந்த 1981ம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான "அந்த ஏழு நாட்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் பாண்டியராஜன்.
47
நடிகர் பாண்டியராஜனின் முதல் படம்:
நடிகர் பாண்டியராஜன் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் 1985 ம் ஆண்டு வெளிவந்த கன்னிராசி திரைப்படம் ஆகும். பிரபு மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான இத்திரைப்படம், இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமாகும். இவர் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மற்றொரு முக்கியமான திரைப்படம் 1985ம் ஆண்டு வெளிவந்த ஆண்பாவம். இந்த படம் இவருக்கு பட்டி தொட்டி எங்கும் வெற்றி பெற்றது. வரும் ஒவ்வொரு பாட்டுகளும் இவருக்கு சம ஹிட்டு அடித்தது என்றே சொல்லலாம்.குறிப்பாக இந்த திரைப்படத்தில் ஒலிக்கும் "காதல் கசக்குதையா" என்ற பாடல் ஆண்டுகள் பல கடந்தும் இன்றளவும் பலரால் ரசிக்கப்பட்டு வருகின்றது.
57
K Bhagyaraj and Pandiarajan Bonding Tamil
1985 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சுமார் 9 திரைப்படங்களை பாண்டியராஜன் இயக்கியிருக்கிறார். இதில் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான "நெத்தியடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் பாண்டியராஜன் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. "கோபாலா கோபாலா", "டபுள்ஸ்" மற்றும் "கபடி கபடி" போன்ற நல்ல பல காமெடி திரைப்படங்களை இயக்கிய பாண்டியராஜன், இறுதியாக கடந்த 2006 ஆம் ஆண்டு அவருடைய மகன் பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியான "கைவந்த கலை" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
67
Guru Shishya Relationship in Tamil Cinema
அது தான் அவர் இயக்கிய கடைசி படமாக இதுவரை இருந்து வருகின்றது. அதேபோல அவருடைய மகனுக்கு அதுதான் முதல் திரைப்படம். சில வருடத்திற்கு முன்பு வெளியான ஸ்டார் திரைப்படம் பிரித்திவிராஜனுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. சின்னத்திரையில் அறிமுகமானார்: அதன் பிறகு சினிமாவை இருந்து சின்னத்திரையில் கால் பதித்த பாண்டியராஜன் பல நாடகங்களிலும் நடத்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் காமெடி ஷோவிலும் ஜட்ஜ் ஆகவும் இருந்திருக்கிறார். வடிவேலுடன் சேர்ந்து காமெடி கதையும் நடித்துள்ளார்.
77
Director Pandiarajan success story
டைரக்டர் சார்னு தான் சொல்லுவாரு: பாக்கியராஜிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் பாண்டியராஜன். எனவே, பாக்கியராஜை தன் குருவாகவும், "டைரக்டர் சார்" என்றும் மரியாதையுடன் குறிப்பிடுவார்.பாண்டியராஜன் எப்போதும் பாக்கியராஜ் மீது மிகுந்த மரியாதையை வைத்திருப்பார். இத்தனை வருஷம் ஆகியும் நான் கூட எப்பயாவது பாக்கியராஜ் பெயர் சொல்லி இருக்கே, ஆனால் என் கணவர் டைரக்டர் சாரே எங்க டைரக்டர் இருந்தா சொல்லுவாரு அந்த அளவிற்கு பாக்கியராஜ் சார் மீது அவ்வளவு மரியாதை வச்சுருக்காரு என் கணவர் என்று பாண்டியராஜனின் மனைவி கூறியுள்ளார். எங்க குடும்பத்தில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதல் ஆளாக பாக்கியராஜ் தான் வருவார் என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து கஷ்ட நஷ்டங்களையும் அவர் ஏற்றுக்கொள்வார் என்றும் எங்களுக்கு அவர் முன்மாதிரியாக விளங்குகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.