
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும், சிவகுமாரின் மகன்களான சூர்யா - கார்த்தியின் படம் பற்றி தகவல் அடிக்கடி செய்திகளில் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சமீப காலமாக, சிவகுமாரின் மகள் பிருந்தா கொடுக்கும் பேட்டிகளில் பேசும் தகவலும் வைரலாகி விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு தகவலை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
பழம்பெறும் நடிகர் சிவகுமாரின் குடும்பம் மிகவும் பாரம்பரியமானது. அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு நல்ல இடத்தை சிவகுமார் அடைந்துள்ளதால், தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் கஷ்ட நஷ்டங்களை சொல்லி கொடுத்து, பிறருக்கு உதவ வேண்டும் போன்ற நல்ல எண்ணங்களுடன் வளர்த்தார். சூர்யா - கார்த்தி இருவரையும் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் கொண்டாட முக்கிய காரணம், சிவகுமாரின் வளர்ப்பு என்றால் அது மிகையல்ல.
சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு, அவர்கள் மேல் அதிகம் கேமராவின் நிழல் பட்டது கிடையாது. அதே போல் தான், அவருடைய மகள் பிருந்தாவும் பெரிதாக எந்த ஒரு இடத்திலும் தான் ஒரு பிரபலத்தின் மகள் என்பதை வெளிப்படுத்த விரும்பாதவர். திருமணத்திற்கு பின்னரே சூர்யா - கார்த்தி சகோதரி பிருந்தா பற்றிய தகவல்கள் அதிகம் வெளியாகின.
'சூர்யா 45' படத்தில் ரூ.100 கோடி வசூல் மன்னனை கேமியோ ரோலில் களமிறக்கும் ஆர்.ஜே.பாலாஜி!
பிருந்தாவுக்கு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ' கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது கூட, அந்த வாய்பபை சிவகுமார் மறுத்துவிட்டார். அதே போல், பிருந்தாவுக்கும் நடிப்பில் பெரிதாக ஆர்வம் இலை. ஆனால் சிறு வயதில் இருந்தே கர்நாடக இசை கற்றவர் என்பதால் ஒரு பின்னணிப்பாடகியாக மாறவேண்டும் என்கிற ஆசை இருந்தது.
பிருந்தா பத்தாம் வகுப்பு படிக்கும் போதே, கார்த்திக் ராஜா அவரை ஒரு ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்துச்சென்று பாட வைக்க முயற்சி செய்தார். ஆனால் பிருந்தா பொது தேர்வுகள் நேரம் என்பதால் அந்த வாய்ப்பை, தன்னுடைய அப்பாவுக்கு பயந்து மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யாருடைய சிபாரிசும் இல்லாமல் பின்னணி பாடகியாக தன்னுடைய திறமையை கொண்டு வாய்ப்பை பெற்றார். பிருந்தாவின் முயற்சிக்கும் , அவரின் வளர்ச்சிக்கும் இன்று வரை அவருடைய கணவர் உறுதுணையாக இருந்து வருகிறார்.
மேலும் அகரம் அறக்கட்டளைக்காக ஒரு பிரார்த்தனை பாடலையும் பாடி கொடுத்துள்ள பிருந்தா, தன்னுடைய அண்ணி நடிப்பில் வெளியான ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தால் ஆகிய படங்களிலும் பாடியுள்ளார். இவர் கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ2 திரைப்படத்தில், விஷால் சந்திரசேகர் இசையில் 'சுவாசமே' என்கிற மெலடி பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் பிரம்மாஸ்திரம் திரைப்படத்தில் ஆலியாபட்டுக்கு டப்பிங் கொடுத்து பிரபலமானார்.
ஆடு பகை குட்டி உறவா? தன் படத்தை எதிர்த்த தாத்தா அன்புமணி; பேத்தி படத்துக்கு உதவிய ரஜினிகாந்த்!
இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய கல்லூரி வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, "பிருந்தா கல்லூரியில் படிக்கும் போது, இவர் பிரபலத்தின் மகள் என்றோ, சூர்யாவின் தங்கை என்றோ யாருக்குமே தெரியாதாம். பிருந்தாவும் எதையும் வெளிப்படுத்திக்கொள்ள விரும்ப மாட்டாராம். சக தோழிகள் எதேர்சையாக உன் வீடு எங்கு இருக்கிறது? என கேட்டால்... தி நகர் கிருஷ்ணா ஸ்ட்ரீட்னு சொன்னால், ஏய் அங்க தான் சூர்யா வீடு இருக்கு. அங்கதான் இருக்கியானு கேட்பார்களாம். ஆமாம் பக்கத்தில் தான் இருக்கேன்னு சொல்லிவிட்டேன், சூர்யாவை சைட் அடிப்பியா என்று கேட்டாங்களாம். பிருந்தா சைட் எல்லாம் அடிக்க மாட்டேன். அவர் எனக்கு அண்ணன் மாதிரி என்று சொன்னால், சூரியாவை போயி அண்ணனு யாராவது சொல்லுவாங்களா? என கூறுவார்கள் என்று தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.