சோலி முடிஞ்சது; கைவிடப்படும் இளையராஜா பயோபிக்? காரணம் தனுஷா?

Published : Dec 11, 2024, 01:05 PM IST

Ilaiyaraaja Biopic : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த இளையராஜா பயோபிக் திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
சோலி முடிஞ்சது; கைவிடப்படும் இளையராஜா பயோபிக்? காரணம் தனுஷா?
Ilaiyaraaja Biopic

இசைஞானி இளையராஜா

இசையால் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் இளையராஜா. அவரின் பாடல்களை ரசிக்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவு ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இளையராஜாவின் பாடல்கள் இருந்துள்ளன. தற்போது 80 வயதுக்கு மேலாகியும் இளையராஜாவை சுறுசுறுப்போடு இயங்க வைத்துக் கொண்டிருப்பது இசை தான். இவரின் இசைப் பயணத்தை பல விழாக்களாக கொண்டாடினாலும், படமாக இதுவரை இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்படாமல் இருந்தது.

24
Ilaiyaraaja Biopic Poster

இளையராஜா பயோபிக்

அதனை போக்கும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளையராஜாவின் பயோபிக் பற்றிய அப்டேட் வெளிவந்தது. அதன்படி இந்த பயோபிக்கில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பை கமல்ஹாசன் ஏற்றிருந்தார். இதனால் இளையராஜா பயோபிக் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இதையும் படியுங்கள்... Kamalhaasan : தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக்கில் இணைந்தார் கமல்ஹாசன்... ஆனால் நடிகராக அல்ல...!

34
Kamal, Ilaiyaraaja, Dhanush

கமல் விலகல்

இப்படத்தை கனெக்ட் மீடியா, பிகே புரொடக்‌ஷன்ஸ், மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு இளையராஜாவின் இசையையே பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருந்தனர். குபேரா படத்தில் நடித்து முடித்ததும் இளையராஜா பயோபிக் தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகினார் கமல்ஹாசன்.

44
Ilaiyaraaja Biopic Dropped

இளையராஜா பயோபிக் டிராப் ஆனது ஏன்?

அதன்பின்னர் அப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது அப்படத்தை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் கைவிடப்பட்டதாலும், சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் அப்படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அதற்கான உண்மை காரணம் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட்டால் தான் உண்மை தெரியவரும்.

இதையும் படியுங்கள்... Ilaiyaraaja Biopic : ஏ.ஆர்.ரகுமானாக சிம்பு.. இளையராஜா பயோபிக்கில் வைரமுத்துவாக நடிக்கப்போவது இந்த மாஸ் நடிகரா?

Read more Photos on
click me!

Recommended Stories