Suriya Selfie with Fans in his 50th Birthday : நடிகர் சூர்யா இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து சொல்ல வந்த ரசிகளுடன் செஃல்பி எடுத்துள்ளார்.
Suriya Selfie with Fans in his 50th Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டு வாசல் முன்பாக திரண்ட ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரசிகர்களை வீட்டு மாடியில் நின்றவாறு அவர்களை பார்த்தவாறு செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
25
ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த சூர்யா
இது ஒரு புறம் இருக்க இது போன்று தளபதி விஜய் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். இது அப்போது பெரியளவில் வைரலானது. அதே போன்று இப்போது சூர்யாவும் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.
சூர்யா தனது 50ஆவது பிறந்தநாளை மனைவி ஜோதிகா உடன் கொண்டாடி இருக்கிறார். தலையில் 50 என்கிற நம்பர் உடன் கூடிய தொப்பி அணிந்திருக்கும் சூர்யாவை கட்டியணைத்தபடி போஸ் கொடுத்துள்ளார் ஜோதிகா. அந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.
35
சூர்யா 50ஆவது பிறந்தநாள்
நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்த படங்களின் அப்டேட்டும் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் கருப்பு திரைப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு உள்ளன. அதில் மீசையை முறுக்கிக் கொண்டு செம கெத்தாக காட்சியளிக்கிறார் சூர்யா. அப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். அப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கருப்பு திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
45
கருப்பு டீசர் வெளியீடு
கருப்பு திரைப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார் சூர்யா. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் சூர்யா. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் எதுவும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் கருப்பு படத்தை மலைபோல் நம்பி உள்ளார் சூர்யா.
55
கருப்பு டீசர் மற்ற படங்களின் காப்பி
கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தன்னுடைய 46வது படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். அதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். அப்படத்தை சித்தாரா நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் அப்படத்திற்கு இசையமைக்கிறார். இதுதவிர வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படமும் நடிகர் சூர்யா கைவசம் உள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜின் ரோலெக்ஸ், விக்ரம் 2 போன்ற திரைப்படங்களும் சூர்யாவின் லைன் அப்பில் உள்ளன. இதனால் அடுத்த ஆண்டு சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது.